1984ல் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆயுஷ் புட் அண்ட் ஹெர்ப்ஸ். இந்நிறுவனம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்றது. புகையிலை நுகர்வை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மூலிகை பான் மசாலா, தோல்,முடி மற்றும் நகங்களுக்கான அழகு விட்டமின் gummies உள்ளிட்டவை இந்நிறுவனத்தின் தயாரிப்பு போர்ட்போலியாவில் இடம் பிடித்துள்ளன. இந்நிறுவனம் ஆரோக்கியம் சார்ந்த கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதை வெளிப்படுத்தும் வகையில், 2024 ஜூலையில் நிறுவனத்தின் பெயரை ஆயுஷ் வெல்னஸ் லிமிடெட் என மறுபெயரிட்டது.
ஆயுஷ் வெல்னஸ் லிமிடெட் நிறுவனம் தனது வலுவான நிதி நிலை முடிவுகள் மற்றும் பங்கு அளிக்கும் சிறந்த மல்டிபேக்கர் ஆதாயம் காரணமாக முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிறுவனம் 2024 செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.14.28 கோடி ஈட்டியுள்ளது.

இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 2,118 சதவீதம் அதிகமாகும். கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.92 லட்சம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 225 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 3 வருடத்தில் பென்னி பங்கான ஆயுஷ் வெல்னஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 3,173 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. 2022 பிப்ரவரியில் இந்நிறுவன பங்கின் விலை வெறும் ரூ.1.83ஆக இருந்தது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. தற்போது இப்பங்கின் விலை ரூ.59.90 என்ற அளவில் உள்ளது.
ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்குகளில் ரூ.3 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.3.27 கோடியாக உயர்ந்திருக்கும். 2024 டிசம்பர் 23ம் தேதியன்று இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.138.24ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி அள்ளி கொடுத்த இந்நிறுவன பங்கு, குறுகிய கால அடிப்படையில் முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்துள்ளது. 2025ம் ஆண்டில் இதுவரை (பிப்ரவரி வரை) இப்பங்கின் விலை 52 சதவீதம் குறைந்துள்ளது. பிப்ரவரியில் மட்டும் இதுவரை 1 சதவீதம் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.60.49 வரை சென்றது.
Story written by: Subramanian
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications