இந்திய பங்குச் சந்தைகளுக்கு 2024ம் ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பல பங்குகளின் விலை புதிய உச்சத்தை தொட்டன.
பல நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்தன. அப்படி மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்த சில பங்குகள் தற்போது அதன் உச்ச விலையிலிருந்து கடுமையாக குறைந்துள்ளன. கொச்சின் ஷிப்யார்ட் உள்ளிட்ட 5 பங்குகள் 28 சதவீதம் முதல் 58 சதவீதம் வரை சரிவு கண்டுள்ளன.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. 2024 ஜூலை 8ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே கொச்சின் ஷிப்யார்ட் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.2,977.10ஐ எட்டியது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் கொச்சின் ஷிப்யார்ட் பங்கின் விலை ரூ.1,235.95ல் முடிவுற்றது. ஆக, இந்நிறுவன பங்கு தற்போது அதன் உச்சவிலையை காட்டிலும் 58 சதவீதத்துக்கும் குறைவாக வர்த்தகமாகி வருகிறது.
டிதாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட்: ரயில் வேகன்கள், பெட்டிகள் மற்றும் பிற போக்குவரத்து தீர்வுகளை வழங்கி வருகிறது டிதாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட். கடந்த ஜூன் 27ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தத்தின் இடையே டிதாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,896.50ஐ எட்டியது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.804.15ஆக இருந்தது. தற்போது இப்பங்கு அதன் உச்ச விலையை காட்டிலும் 57 சதவீதம் குறைவான விலையில் வர்த்தமாகி வருகிறது.
கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா லிமிடெட்: மின்னணு உற்பத்தி சேவைகள் வழங்கும் நிறுவனம் கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா லிமிடெட். கடந்த மாதம் 1ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் பங்கின் விலை அதன் புதிய 52 வார உச்சமான ரூ.7,824.95ஐ தொட்டது.
அதன் பிறகு பங்கு விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.4,004.45ஆக இருந்தது. ஆக, தற்போது இந்நிறுவன பங்கு அதன் உச்ச விலையை காட்டிலும் 48 சதவீதம் குறைவான விலையில் வர்த்தகமாகி வருகிறது.
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்: ரயில் பாதை அமைத்தல், நிலைய மேம்பாடு மற்றும் மின்மயமாக்கல் உள்ளிட்ட ரயில்வே உள்கட்டமைப்பு கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆர்விஎன்எல் (ஆர்விஎன்எல்) நிறுவனம். 2024 ஜூலை 15ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஆர்விஎன்எல் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.647ஐ எட்டியது. அதன்பிறகு பங்கு விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆர்விஎன்எல் நிறுவன பங்கின் விலை ரூ.360ல் முடிவுற்றது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை அதன் உச்சத்திலிருந்து 44 சதவீதம் குறைவாக உள்ளது.
பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் லிமிடெட்: பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் லிமிடெட் நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தொலைத்தொடர்பு பொருட்கள் வடிவமைத்தல், தயாரித்தல் உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த ஜனவரி 6ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,054.95ஐ எட்டியது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடைந்தபோது, பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் பங்கின் விலை ரூ.758.30ஆக இருந்தது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை அதன் உச்ச விலையை காட்டிலும் 28 சதவீதம் குறைவாக உள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications