இந்திய பங்குச்சந்தையில் கடந்த 3 ஆண்டுகளாக லாபத்தை குவித்து வந்த ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ் (Stylam Industries) பங்குகள் திடீரென சற்று சரிந்தது. கடந்த 3 ஆண்டில் இந்த பங்கு 597% உயர்ந்து முக்கிய மல்டிபேக்கராக மாறியது.
மல்டிபேக்கர் என்பது ஒரு பங்கு குறுகிய காலத்தில் பல மடங்கு உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிகம் லாபம் தரும் பங்குகள். உதாரணமாக ஒரு வருடத்தில் 3 மடங்கு பங்கு விலை உயர்வு, 5 வருடத்தில் 10 மடங்கு உயர்வு போன்று அதிரடியான வளர்ச்சியை பதிவு செய்யும் பங்குகளை மல்டிபேக்கர் என அழைப்பது வழக்கம், இதுப்போன்ற பங்குகளை தான் அனைத்து முதலீட்டாளர்களும் தேடி வரும் நிலையில், இதை கண்டறிவது மிகவும் கடினம்.

ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த 2020 ஆகஸ்ட் 10ஆம் தேதியில் வர்த்தக முடிவில் ரூ.225 இருந்த பங்கு விலை ஆகஸ்ட் 11 2023இல் ரூ.1570 ஆக உயர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ் பங்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது அதன் மதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்களாக ஆகியிருக்கும். இதே கால கட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு 71.45% உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 2.70% குறைந்து ரூ.1570க்கு வர்த்தகமானது. இது முந்தைய சந்தை முடிவின் போது ரூ.1613.65 ஆக இருந்தது. இதன் மூலம் Stylam Industries நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2687.27 கோடியாக இருந்தது.
ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு ஒரு ஆண்டில் 38.53% அதிகரித்தது. இந்தாண்டு தொடக்கத்திலிருந்து 41.42% உயர்ந்தது. கடந்த 6 மாத காலத்தில் இந்தப் பங்கின் விலை 39.17% அதிகரித்தது.
இந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் பங்கின் லாபம் ரூ.41.8 கோடி ஆனது. இதேகாலகட்டத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.35.3 கோடியாக இருந்தது. அதேவேளையில் முதல் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 3.82% குறைந்து ரூ.226.2 கோடியானது.
இது முந்தைய நிதியாண்டில் ரூ.235 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 32.38% உயர்ந்து ரூ.27.8 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.21 கோடியாக இருந்தது.
ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ் லேமினேட், solid surface panels மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளில் ஈடுபட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் உயர் அழுத்த லேமினேட்கள், செயல்திறன் லேமினேட்கள் (HPL), சிறப்பு லேமினேட்கள், ஸ்பெஷாலிட்டி சர்பேஸ், அக்ரிலிக் சாலிட் சர்பேஸ் மற்றும் சிறிய லேமினேட்டுகள் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications