400% ரிட்டர்ன் கொடுத்த மல்டிபேக்கர் சுதர்ஷன் பார்மா.. 52 வார உச்சம் தொட்ட பங்கு விலை..!!

பங்குச் சந்தையில் பார்மா துறையைச் சேர்ந்த சுதர்சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, ஸ்மால் கேப் வகையை சேர்ந்த பங்கு ஆகும். இன்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து புதிய 52 வார உயர்வான ரூ. 424.35 புள்ளிகளைத் தொட்டது. சுதர்சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் பங்குதாரர்களிடம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் பங்குப் பிரிப்பு ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து புதிய 52 வார உச்சத்தை தொட்டு ரூ. 424.35 புள்ளிகளைத் தொட்டது. மேலும், இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டில் பங்குதாரர்களுக்கு 398 சதவீத லாபத்தை அளித்து மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது.

 400% ரிட்டர்ன் கொடுத்த மல்டிபேக்கர் சுதர்ஷன் பார்மா.. 52 வார உச்சம் தொட்ட பங்கு விலை..!!

நிறுவனத்தின் பரிவர்த்தனை தாக்கல் படி, நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 61 இன் படி, செப்டம்பர் 30, 2024 அன்று நடைபெறும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், ரூ. 10 முகமதிப்பு கொண்ட சமபங்குப் பங்கைப் பிரிப்பதற்கான முன்மொழிவை பரிசீலித்து ஒப்புதல் அளிக்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு விவாதங்களை நடத்தும் என்று நிறுவனம் தனது பரிமாற்றத் தாக்கல் செய்வதில் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பங்குக் கண்ணோட்டத்தைப் பார்த்தால், இன்றைய வர்த்தகத்தில் சுதர்சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கின் விலை 4.4 சதவீதம் அதிகரித்து ரூ. 421.95 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 424.35 ஆகவும், 52 வாரங்களில் குறைவாக ரூ. 58.20 ஆகவும் உள்ளது.

இந்த பங்கு கடந்த வாரத்தில் சுமார் 21 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது, கடந்த மாதத்தில் இந்த பங்கு சுமார் 138 சதவீதம் லாபம் ஈட்டியது, இதேபோல், இந்த பங்கு கடந்த ஆறு மாதங்களில் சுமார் 470 சதவீதம், கடந்த ஆண்டில் 398 சதவீதம், கடந்த ஐந்து ஆண்டுகளில் 574 சதவீதம் அதன் பங்குதாரர்களுக்கு லாபம் கொடுக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 1020 கோடி ஆகும்.

சுதர்சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இரண்டு வகையான துறைகளில் செயல்படுகிறது. அதில் ஒன்று பார்மா துறை, இரண்டாவது கெமிக்கல் துறை ஆகும்.இந்த நிறுவனம் பெயிண்ட், உணவு மற்றும் பார்மா துறைகளுக்கு பல்வேறு வகையான ரசாயனங்களை உற்பத்தி செய்கிறது.

மேலும் இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை நமது நாட்டிற்கும் உலக நாடுகளான, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா, ஓமன் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனம் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, ​​இந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை நிதி தலைநகர் மும்பையில் நடத்தி வருகிறது. ஜூன் 2024க்குள், இந்த நிறுவனத்தில் 60 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+