பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்தது என்று கூறப்படுகிறது. இருப்பினும், அதிலும் சில நேரங்களில் ரிஸ்க் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பங்கு விலைகள் சரிந்தால், அந்த பங்குகளை வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு குறையும். இது பண்டின் அடிப்படை சொத்துக்களின் குறைந்த மதிப்பை பிரதிபலிக்கிறது. தற்போது டாடா மோட்டார்ஸ் பங்குகளை வாங்கியிருந்த மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் அது போன்ற நிலையை எதிர்கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் இலகு ரக டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
டிரம்பின் இந்த வரி விதிப்பு வரும் வாரத்தில் அமலுக்கு வர உள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த வியாழக்கிழமையன்று நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் பங்கு விலை 6 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. கடந்த பிப்ரவரி தரவுகளின்படி, சுமார் 36 மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், டாடா மோட்டார்ஸின் மொத்தம் 39.69 கோடி பங்குகளை வைத்திருந்தனர். இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.24,638 கோடியாகும்.

1 கோடிக்கும் அதிகமாக டாடா மோட்டார்ஸ் பங்குகளை தங்களது போர்ட்ஃபோலியாவில் கொண்டுள்ள மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள்
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் - 10.2 கோடி பங்குகள்
ஐசிஐசிஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் - 6.5 கோடி பங்குகள்
எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் - 5.1 கோடி பங்குகள்
யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் - 3.2 கோடி பங்குகள்
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் - 2.43 கோடி பங்குகள்
ஆதித்யா பிர்லா எஸ்எல் மியூச்சுவல் ஃபண்ட் - 1.65 கோடி பங்குகள்
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் - 1.62 கோடி பங்குகள்
மிரே மியூச்சுவல் ஃபண்ட் - 1.57 கோடி பங்குகள்
ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் - 1.42 கோடி பங்குகள்
ஃபிராங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் - 1.20 கோடி பங்குகள்
5 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது போர்ட்ஃபோலியாவில் 1 லட்சத்துக்கும் குறைவாக டாடா மோட்டார்ஸ் பங்குகளை வைத்திருந்தன. ஜெரோதா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டாடா மோட்டார்ஸின் 88,647 பங்குகளை வைத்திருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5.50 கோடியாகும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் குறைந்தபட்சமாக வைட்ஓக் கேபிட்டல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சுமார் 550 பங்குகளை வைத்திருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.5 லட்சமாகும். கடந்த ஃபிப்ரவரியில் 339 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தங்கள் போர்ட்ஃபோலியாக்களில் டாடா மோட்டார்ஸ் பங்கினை வைத்திருந்தன. கடந்த வியாழக்கிழமையன்று டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 6 சதவீதம் குறைந்ததால், அந்த பங்குகளை வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பும் சரிவடைந்திருக்கும். நீங்கள் எந்த மியூச்சுவல் ஃபண்டை வைத்திருக்கிறீர்கள்?..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?



Click it and Unblock the Notifications