மத்திய அரசுக்கு சொந்தமான நவரத்னா அந்தஸ்து பெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனம் 3 ஆண்டுகளில் 242% லாபம் தந்து முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அது என்ன நிறுவனம், இப்போது அதில் முதலீடு செய்யலாமா என்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
NALCO என்பது மத்திய அரசுக்கு சொந்தமான அலுமினிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதிக்கான நிதிநிலை முடிவுகளை அங்கீகரிக்க, இயக்குநர்கள் குழு கூட்டம் நவம்பர் 2 அன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காலாண்டு முடிவுகளுடன் சேர்த்து, இடைக்கால ஈவுத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படவுள்ளது.

கடந்த 2 மாதங்களாக இந்த பங்கின் விலை சரிந்திருந்தாலும், டெக்னிக்கல் அனலிசிஸ் செய்தால் பாசிட்டிவான சிக்னலே வருவதாக Ventura தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. வென்சுரா நிறுவனம் இப்பங்கிற்கு 380 ரூபாய் என்ற இலக்கு விலையுடன் வாங்கலாம் என்ற பரிந்துரையை வழங்கி உள்ளது. இன்று இதன் பங்கு மதிப்பு 314 ரூபாயாக உள்ளது.
நால்கோ நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து லாபத்திலிருந்து பங்குகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இதன் ஈவுத்தொகை சுமார் 3.68% முதல் 3.73% வரை உள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையும் நவம்பர் 2 அன்று நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பங்கு மதிப்பு சுமார் 242 % உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை தந்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 33 % உயர்வு கண்டிருக்கிறது. இந்நிறுவனம் ஒரு பங்குக்கு நான்கு ரூபாய் வரை இந்த முறை ஈவுத்தொகை வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லபப்டுகிறது.
இந்நிறுவன பங்கின் 52 வாரகால உச்சபட்ச மதிப்பு 445 ரூபாயாக இருக்கிறது. சுமார் 60,000 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்டுள்ள இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் 18509 கோடி ரூபாய் வருமானத்தையும் 5897 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் பிரமோட்டர்கள் வசம் இருக்கிறது ,வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 21 சதவீத பங்குகளையும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 11 சதவீத பங்குகளையும் இந்த நிறுவனத்தில் வாங்கி வைத்திருக்கின்றன. அந்த வகையில் நிறுவன முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

