சும்மா இல்ல ரூ.290 கோடி..!! இன்போசிஸ் நாராயணமூர்த்தி தேடி தேடி முதலீடு செய்த 2 பங்குகள்..!!

இந்தியாவின் முன்னனி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இந்திய ஐடி துறை வளர்ச்சியில் இவரது பங்கு மிக முக்கியமானது. நாராயணமூர்த்தி ஐடி துறை மட்டுமில்லாமல் சரியான நிறுவனத்தை தேர்வு செய்து பணம் முதலீடு செய்வதிலும் வல்லவர். அந்த வகையில் முதலீடுகளுக்காக நாராயண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்டமரன் வென்ச்சர்ஸ் (Catamaran Ventures) என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

சரியான சமயத்தில் பொருத்தமான நிறுவனத்தை தேடி முதலீடு செய்யும் கேட்டமரன் வென்ச்சர்ஸ் நிறுவனம், உற்பத்தி துறையை சேர்ந்த இரண்டு நிறுவனங்களில் 290 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுமே உற்பத்தி துறை சார்ந்தது. அது மட்டுமில்லாமல் இரண்டுமே கடன் சுமை இல்லாதவை. குறிப்பாக சர்வதேச அளவில் ஏற்றுமதியில் கவனம் செலுத்துபவை.இந்த இரண்டு நிறுவனங்களும் ஜப்பானிய நிறுவனங்களுடன் வலுவான தொழில்நுட்ப மற்றும் வணிக தொடர்புகளை கொண்டுள்ளன. அவை என்னென்ன நிறுவனங்கள் என தெரிந்து கொள்ளலாம்.

சும்மா இல்ல ரூ.290 கோடி..!! இன்போசிஸ் நாராயணமூர்த்தி தேடி தேடி முதலீடு செய்த 2 பங்குகள்..!!

டி.டி. பவர் சிஸ்டம்ஸ் (TD Power Systems): பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம். ஏசி ஜெனரேட்டர்கள் மற்றும் மின் மோட்டார்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. கேட்டமரன் வென்ச்சர்ஸ் இந்த நிறுவனத்தில் 1.46% பங்குகளைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 262 கோடி ரூபாய். கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் சிஏஜிஆர் 40% என்ற அளவில் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 239 கோடியாக உள்ளது.

Also Read

கடந்த 5 ஆண்டுகளில் இதன் பங்கு விலை சுமார் 2,775% உயர்ந்துள்ளது. ஒரு பங்கு தற்போது 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இதில் 20%க்கும் அதிகமான பங்குகளை வாங்கி வைத்துள்ளன. அந்த வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக இது திகழ்கிறது.

வர்தமான் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் (Vardhman Special Steels): கார், பைக்குகள் மற்றும் டிராக்டர்களுக்கான பாகங்களை தயாரிக்க தேவையான உயர்தர உலோக கலவைகளை தயாரிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தில் கேட்டமரன் வென்ச்சர்ஸ் 1.02% பங்குகளைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 28 கோடி ரூபாய். டொயோட்டா நிறுவனத்தின் அங்கமான ஐச்சி ஸ்டீல் உடன் இந்த நிறுவனம் நெருக்கமான கூட்டணியை கொண்டுள்ளது. டொயோட்டா, மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்கள்.

இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் சாதனை அளவாக 122 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடன் இல்லாத இந்த நிறுவனம், தனது விரிவாக்கத்திற்காக 2,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 270 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 20%க்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளனர். 5 ஆண்டுகளில் இந்த நிறுவன பங்கு மதிப்பு 110% உயர்வு கண்டுள்ளது.

Recommended For You

கடன் இல்லாத, மற்றும் உலக அளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களை நாராயணமூர்த்தியின் குடும்ப நிறுவனம் தேர்வு செய்து முதலீடு செய்திருக்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் எப்படி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+