பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதியன்று 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. தற்போது மோடி அரசு இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்களில் அதிகம் கவர்ந்த சில திட்டங்களை பார்ப்போம்.
மகளை காப்பாற்று மகளை படிக்கவை: மோடி அரசு தனது முதல் பட்ஜெட்டில் மிகவும் பிரபலமான "மகளை காப்பாற்று மகளை படிக்கவை" (பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ) திட்டத்தை அறிவித்தது. அப்போது நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி, பெண் குழந்தையின் கல்வி, அதிகாரம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாக கொண்ட இந்த திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கினார்.

தங்க பத்திரம்: மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது இரண்டாவது பட்ஜெட்டில் (2015) தங்க பத்திரம் திட்டத்தை அறிவித்தார். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக காகித வடிவத்தில் வாங்குவதாகும். தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மோடி அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்துக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இலவச எல்பிஜி இணைப்புகள்: 2016ல் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு குடும்பத்தின் பெண் உறுப்பினர் பெயரில் இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார். அந்த ஆண்டு மே மாதம் பெட்ரோலிய அமைச்சகம், கிராமப்புற வீடுகளுக்கு சமையல் கியாஸ் வழங்குவதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்கீழ், பெண்கள் இன்னும் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களை பெறுகிறார்கள்.
தேசிய தேர்வு முகமை: 2017 பட்ஜெட்டில், உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிக்கப்பட்டது. 2017 நவம்பரில் இந்திய சங்கங்கள் பதிவு சட்டம் 1860ன் கீழ் தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டது. தற்போது நீட், யுஜிசி-என்இடி போன்ற தேர்வுகளையும் இந்த முகமை நடத்தி வருகிறது.
ஆயுஷ்மான் பாரத்: 2018 பட்ஜெட்டில், 10 கோடி குடும்பங்களுக்கு தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை அருண் ஜெட்லி அறிவித்தார். இந்த திட்டம் பின்னர் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டமாக அறிமுகமானது. அதிக மக்களுக்கு இந்த காப்பீட்டு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
பான் மற்றும் ஆதார் பரிமாற்றம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019ல் அறிவித்த முழு பட்ஜெட்டில், பான் மற்றும் ஆதாரை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் வரி செலுத்துவோர் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தியும் தங்கள் வரிகளை தாக்கல் செய்யலாம்.
புதிய வரி விதிப்பு: 2020 பட்ஜெட்டில், சாதாரண மக்கள் வரி தாக்கல் செய்வதை எளிதாக்கும் நோக்கில், புதிய வரி விதிப்பு விதிமுறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். இது வெவ்வேறு வருமான வரம்புகளுக்கு அதிக வரி அடுக்குகளை கொண்டிருந்தது. அதேசமயம் குறைவான விலக்குகளை கொண்டிருந்தது.
கோவிட் தடுப்பூசி: 2021ம் ஆண்டில், கோவிட்-19 வைரஸ் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகள் ஏற்பட்டபிறகு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக ரூ.35,000 கோடியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கினார். இதன் பலனாக தடுப்பூசிகள் விரைந்து உருவாக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக போடப்பட்டது.
கதிசக்தி: 2021 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சியை தடை செய்யும் நோக்கில், கிரிப்டோகரன்சி மூலதன ஆதாயங்களுக்கு 30 சதவீதம் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், பொது போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கில் கதிசக்தி திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய வரி விதிப்பில் வரி அடுக்குகளில் மாற்றம்: 2023ம் ஆண்டு பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பின் வருமான வரி அடுக்குகளில் மாற்றங்களை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார். புதிய வரி விதிப்பின்கீழ், ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
வந்தே பாரத் ரயில் பெட்டிகள்: 2024ல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய மாற்றங்களோ அல்லது அறிவிப்புகளோ இடம் பெறவில்லை. இருப்பினும், 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் அதிவேக வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மாற்றப்படும் என்று அறிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story Written by: Subramanian
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications