பங்குச் சந்தையில் எப்போது ஒரு நிறுவன பங்கின் விலை உயரும் என்று யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. சில நிறுவன பங்குகளின் விலை நீண்ட நாட்களாக பெரிய மாற்றம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் திடீரென அந்த பங்குகள் விலை மளமளவென உயர்ந்து முதலீட்டாளர்களை பெரும் செல்வந்தர்களாக்கி விடும்.
அப்படி முதலீட்டாளர்களை உயர்த்திய பங்குகளில் ஒன்றுதான் நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Network People Services Technologies Limited - NPST). இந்நிறுவனம், வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைக்கு மென்பொருள் மற்றும் டிஜிட்டல் பேமண்ட் தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவன பங்கு இரண்டே ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் பணத்தை 5,800 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் NPST பங்கு விலை 485 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் மல்டிபேக்கர் ஆதாயம் கொடுத்த இந்த ஸ்மால் கேப் பங்கு மீது எப்போதும் ஒரு கண் வைத்து இருப்பது நல்லது. இந்நிறுவனத்தின நிதி நிலை முடிவுகளும், ஆர்டர் நிலவரமும் சிறப்பாக உள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. மேலும் செயல்பாட்டு லாபமாக ரூ.25 கோடி சம்பாதித்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப வரம்பு 33 சதவீதமாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 17 கோடியாக உள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.128 கோடியும், நிகர லாபமாக ரூ.27 கோடியும் ஈட்டியுள்ளது.
NPST நிறுவனம் அண்மையில் கேரளா கிராமின் வங்கி மற்றும் கர்நாடக கிராமின் வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்து மொபைல் பேங்கி சொல்யூஷன்ஸ்க்கான ஆர்டரை பெற்றுள்ளது. தங்களின் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவை கிடைக்க வேண்டும் நோக்கத்தில் அந்த வங்கிகள் மொபைல் பேங்கிஸ் சொல்யூஷன்ஸ்க்கான ஆர்டரை NPST நிறுவனத்துக்கு வழங்கியுள்ளன.
இந்த ஆர்டர் மூன்று ஆண்டுகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இறுதியில் நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.1,580ல் முடிவுற்றது.
தேசிய பங்குச் சந்தையில் 2023 ஜூலை 20ம் தேதியன்று நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை 52 வார குறைந்த அளவாக 243.33க்கு சென்றது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை மளமளவென ஏற்றம் கண்டது. கடந்த 12ம் தேதியன்று இப்பங்கு விலை 52 வார புதிய உச்சமான ரூ.1,774ஐ எட்டியது. இப்பங்கு குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications