சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்டிகல் ஃபைபர் இறக்குமதிக்கு மத்திய நிதி அமைச்சகம் கடுமையான வரியை விதித்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும் பல துறையை சேர்ந்த பல நிறுவனங்கள் குறைந்த விலை மற்றும் குறைந்த தரமான பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்கிறது.
இதின் மூலம் இந்தியாவில் இருக்கும் பல நிறுவனங்கள் இதன் மூலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அப்படி மாட்டிக்கொண்டுள்ள ஒரு பிரிவு வர்த்தகம் தான் ஆப்டிகல் ஃபைபர், வெளிநாட்டின் தரமற்ற மற்றும் மலிவு விலை ஆப்டிகல் ஃபைபர் மூலம் இந்தியாவின் நீண்ட கால திட்டத்தில் பெரிய பாதிப்பும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய அளவிலான பாதிப்பும் ஏற்படுகிறது.

இந்திய நிறுவனங்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்டு எடுக்கவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு வலிமையான பாதையை அமைக்கும் விதமாக தரமற்ற ஆப்டிகல் ஃபைபர் இறக்குமதிக்கு anti-dumping duty விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு ஆப்டிகல் ஃபைபர் துறைக்கும் நிறுவனங்களுக்கும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
தரமற்ற மற்றும் மலிவு விலை ஆப்டிகல் ஃபைபர் மீதான வரி விதிக்கப்பட்டதன் மூலம் உள்நாட்டில் இருக்கும் Sterlite Technologies, Birla cable ஆகியவற்றுக்கு சாதகமான வர்த்தக சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து Sterlite Technologies பங்குகள் இன்று 5.44 சதவீதம் உயர்ந்து 159.95 ரூபாயாக உள்ளது, Birla cable நிறுவன பங்குகள் இன்று 19.99 சதவீதம் உயர்ந்துள்ளது. இது இந்திய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. இந்த நிறுவனங்களின் உற்பத்தியும், வர்த்தகமும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் நீண்ட கால முதலீட்டில் இது பலன் அளிக்கும். இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு புதிய உந்து சக்தியாகவும் இருக்கும்.
வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குநரகத்தின் (டிஜிடிஆர்) பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் தற்போது சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் dispersion unshifted SMOF மீது மத்திய வருவாய்த் துறை வரியை விதித்துள்ளது.
மத்திய அரசு தற்போது ஒரு kfkmக்கு 122 டாலர் முதல் 857.23 டாலர் வரையிலான anti-dumping வரியை விதித்துள்ளது. இந்த கடுமையான வரி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் ஆப்டிக்கல் பைபர்-ஐ காட்டிலும் மிகவும் குறைவான விலையில் தரமற்ற ஆப்டிக்கல் பைபர்-ஐ சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தரமற்ற ஆப்டிக்கல் பைபர் மூலம் சில வருட பயன்பாட்டிலேயே கோளாறு ஏற்பட்டு பல செலவுகளை கூடுதலாக உருவாக்கும். இது இந்தியாவின் நீண்ட கால டிஜிட்டல், டெலிகாம், கம்யூனிகேஷன் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.


Click it and Unblock the Notifications