பாதுகாப்பு துறையை சேர்ந்த நிறுவனம் நிபே லிமிடெட். இந்நிறுவனம் வான்வெளி மற்றும் ராணுவ தளவாட உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து ரூ.150.62 கோடி மதிப்பிலான ஒரு ஏற்றுமதி ஆர்டரை பெற்றுள்ளதாக நிபே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நிபே லிமிடெட் நிறுவனம் மும்பை பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், உலகளவில் புகழ்பெற்ற முன்னணி தொழில்நுட்ப அடிப்படையிலான இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.150.62 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டரை நிறுவனம் பெற்றுள்ளது. 300 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்ட யுனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்கள் இஸ்ரேல் நிறுவனத்துக்கு தயாரித்து வழங்கப்பட உள்ளது.

யுனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்கள்
யுனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்கள் அதன் பிரவில் மிகவும் மேம்பட்ட ஒன்றாகும். தற்போது உலகில் கிடைக்கும் மாற்றுகளை விஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டர் நிபே நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கத்தில் ஒரு பெரிய படியை குறிப்பது மட்டுமல்லாமல், நவீன போர் அமைப்புகளின் துறையில் இந்தியாவின் மூலோபாய நிலையை வலுப்படுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நிறுவனத்தின் ஏற்றுமதி ஆர்டரை பெற்று இருப்பது, நிபே லிமிடெட் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியே நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளதே வெளிப்படுத்துக்கிறது. இதன் தாக்கம் இன்றைய பங்கு வர்ததகத்தில் இந்நிறுவன பங்கின் விலையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மல்டிபேக்கர் லாபம்
நீண்ட கால அடிப்படையில் நிபே நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 15,300 சதவீதத்துக்கு மேல் பெருக்கியுள்ளது.அதேசமயம் கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 1.96 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 2025ம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 8.69 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் இப்பங்கு 7.7 சதவீதம் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
2024 ஆகஸ்ட் 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே நிபே பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.2,245.40ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த மார்ச் 19ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.753.05க்கு சென்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,525.00ஆக இருந்தது.
நிதி நிலை முடிவுகள்
மும்பை பங்குச் சந்தை வலைதளத்தின் தரவுகளின்படி, நிபே லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.138.88 கோடி ஈட்டியுள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2.82 கோடி ஈட்டியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் ரூ.1.98ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications