5 வருடத்தில் 5500% வளர்ச்சி.. வியக்க வைக்கும் லாபத்தைக் கொடுத்த Penny Stock..!

பங்குச் சந்தை முதலீடு பல்கிப் பெருகி முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித் தர வேண்டும். ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மெதுவாகவும், மற்ற நிறுவனங்களின் பங்குகள் மிகவும் வேகமாகவும் வளருகின்றன.

குறுகிய காலத்தில் 100 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி கண்ட பங்குகள் மல்டிபேக்கர் பங்குகள் என அனைவராலும் அழைக்கப்படுகின்றன.

அப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள் 5 வருடத்தில் 5500 சதவீதம் வளர்ச்சி அடைந்து 7 ரூபாயில் இருந்து 395 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

சிறு துளியில் இருந்து பெரு வெள்ளமாக

சிறு துளியில் இருந்து பெரு வெள்ளமாக

நைப் நிறுவனப் பங்குகள் பிஎஸ்இ சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. சந்தை நிகழ்வுகளைக் கோவிட்-19 பெருந்தொற்று மிகக் கடுமையாகப் பாதித்தது. அத்தகைய கொடிய நிகழ்வுக்குப் பிந்தைய சந்தை நிகழ்வுகளின் படி, இந்த நிறுவனப் பங்குகள் அதன் அடிமட்ட விற்பனை விலையில் இருந்து மிக வேகமாக உயர்ந்து பெரும் லாபத்தைத் தனது முதலீட்டாளர்களுக்கு வழங்கியது. எனவே இந்த நிறுவனப் பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

இமாலய வளர்ச்சி

இமாலய வளர்ச்சி

பாதுகாப்பு துறையைச் சார்ந்த நைப் நிறுவனப் பங்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 12 ரூபாயில் இருந்து 391 ரூபாய் வரை உயர்ந்து, அதன் நீண்ட காலப் பங்குதாரர்களுக்கு 3,150 சதவீத லாபத்தை வழங்கியுள்ளது. இந்த உயர்வின் காரணமாகப் பென்னி ஸ்டாக்காக இருந்த இந்த நிறுவனப் பங்குகள் இப்போது மல்டிபேக்கர் ஸ்டாக்காக மாறியது.

Nibe பங்கு விலை வரலாறு

Nibe பங்கு விலை வரலாறு

இந்த நிறுவனத்தின் பங்கு ஜனவரி 2023 இல் அதன் வாழ்நாள் உச்சத்தை எட்டியது. அதன் பிறகு, முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியேற்ற முடிவு செய்ததன் மூலம் கடந்த ஒரு மாதத்தில், நைப் நிறுவனப் பங்குகள் சுமார் 10 சதவீத அளவிற்கு விலை குறைத்துள்ளது. அதேசமயம் கடந்த ஆறு மாதங்களில், இந்த நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு மல்டிபேக்கர் வருவாயை அளித்துள்ளது.

6 - 12 மாத வளர்ச்சி

6 - 12 மாத வளர்ச்சி

கடந்த ஆறு மாதங்களில், இந்த ஸ்மால்-கே பங்கு ஒன்றுக்கு ₹191ல் இருந்து ₹395 வரை உயர்ந்துள்ளது. இது சுமார் 105 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஓராண்டில், இந்தப் பாதுகாப்புத் துறை சார்ந்த நைப் நிறுவனத்தின் பங்குகள் ₹50 இல் இருந்து ₹391 வரை உயர்ந்துள்ளது. இது சுமார் 675 சதவீத வளர்ச்சியாகும்.

5 ஆண்டில் பிரம்மாண்ட வளர்ச்சி

5 ஆண்டில் பிரம்மாண்ட வளர்ச்சி

கடந்த மூன்று ஆண்டை எடுத்துக் கொண்டால், இந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ 12 இல் இருந்து ரூ 391 ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 3250 மடங்கு வளர்ச்சியாகும். இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில், இந்தப் பென்னி பங்கு ரூ 7.10 இல் இருந்து ₹391 வரை உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி சதவீதத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

முதலீட்டில் தாக்கம்

முதலீட்டில் தாக்கம்

Nibe பங்கு விலை வரலாற்றின் குறிப்பை எடுத்துக் கொண்டால், ஒரு முதலீட்டாளர் இந்தப் பங்கில் ஒரு மாதத்திற்கு முன்பு ₹1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அந்த ₹1 லட்சம் இன்று ₹90,000 ஆகக் குறைந்திருக்கும். முதலீட்டாளர் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக்கில் ₹1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், இன்று ₹2.25 லட்சமாக மாறியிருக்கும்.

மாபெரும் வளர்ச்சி

மாபெரும் வளர்ச்சி

அதேபோல், ஒரு முதலீட்டாளர் இந்த மல்டிபேக்கர் பாதுகாப்புத் துறை பங்கில் ஓராண்டுக்கு முன்பு ₹1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அந்த ரூ.1 லட்சம் இன்று ₹7.75 லட்சமாக மாறியிருக்கும். அதேபோல, ஒரு முதலீட்டாளர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பென்னி டிஃபென்ஸ் ஸ்டாக்கில் ₹1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அந்த ₹1 லட்சம் இன்று ₹32.50 லட்சமாக மாறியிருக்கும்.

56 லட்சம்

56 லட்சம்

அதேபோல், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலீட்டாளர் இந்தப் பங்கில் ₹1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அந்த ₹1 லட்சம் இன்று ₹56 லட்சமாக மாறியிருக்கும். இதே காலக் கட்டத்தில் நீங்கள் தங்கத்தின் விலையேற்றத்தை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். தங்கத்தின் விலை ஏற்றத்தை விட இந்த நிறுவன பங்குகளின் விலை மிகப் பயங்கரமாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு

நிறுவனத்தின் சந்தை மதிப்பு

இந்த மல்டிபேக்கர் பங்கு BSE சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 408 கோடி ரூபாய். கடந்த புதன் அன்று இந்த நிறுவனத்தின் வர்த்தக அளவு 11,201. இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கின் 52 வாரக் குறைந்த விலை ₹41.65 ஆகவும், 52 வார அதிகபட்சம் ₹564.90 ஆகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+