பங்குச்சந்தையில் குறிப்பிட்ட சில பங்குகள் எந்த ஒரு சந்தை ஏற்ற இறக்கம் இருந்தாலும் அதை தாண்டி முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபம் தரும். அப்படி பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபம் பெற்று தந்திருக்கிறது.
NIBE என்பது பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 9 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 1,832 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. தொடர்ந்து 2ஆவது நாளாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஸ்மால் கேப் நிறுவனம் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-விடம் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது.

Modular Bridging System என்ற எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கக்கூடிய வகையிலான பாலங்களை உருவாக்கி பாதுகாப்பு துறைக்கு வழங்க கூடிய ஒப்பந்தத்தை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. திங்கள்கிழமை அன்று இந்நிறுவனம் பங்குச்சந்தையில் இந்த தகவலை வெளியிட்டது. இதனை அடுத்து இரண்டு நாட்களாக இந்நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி பாதையில் இருக்கிறது.
எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு சென்று ஒருங்கிணைத்து பயன்படுத்தும் தன்மை கொண்ட 46 மீட்டர் நீளம் கொண்ட பாலங்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. ராணுவம் தன்னுடைய ஆயுதங்களையும் டாங்குகளையும் இந்த பாலத்தின் உதவியோடு பல இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த பாலத்தை உற்பத்தி செய்து ராணுவத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தான் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 35 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 400 சதவீதமும் மூன்றாண்டுகளில் 3 , 274 சதவீதமும் 5 ஆண்டுகளில் சுமார் 18000 சதவீதமும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.
அதாவது 2020ஆம் ஆண்டு 13 ரூபாய் என இருந்த இந்நிறுவனத்தின் பங்கு 1,832 ரூபாய் என வளர்ந்துள்ளது. பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பங்குகளில் மல்டி பேக்கர் பங்காக இது பார்க்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து தருவதில் இந்த நிறுவனம் திறன் பெற்றதாக இருக்கிறது. இந்தியாவின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் தொடர்ந்த இந்த நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை பெற்று வருகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications