இந்திய பங்கு சந்தையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது மற்ற முக்கிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது, நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது எனலாம்.
பொதுவாக நீண்டகால நோக்கில் பங்கு சந்தை முதலீடானது சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவினை பொறுத்தவரையில் நடப்பு ஆண்டில் பங்கு சந்தைகள் என்பது சிறந்த முதலீடாகவே பார்க்கப்பட்டது. ஆக மொத்தம் நடப்பு ஆண்டில் இந்திய சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே அமைந்திருக்கலாம்.
ரெசசன் அச்சம்
சர்வர்தேச அளவில் பல நாடுகளில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது மேற்கொண்டு ரெசசனை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்கு சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நிஃப்டி இவ்வளவு ஏற்றமா?
எனினும் இந்த காலகட்டத்திலும் இந்திய சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 2020ல் 7511 புள்ளிகளை தொட்டாது. இது நடப்பு டிசம்பர் மாதத்தில் 18,887 புள்ளிகலை எட்டியது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 151.45% அல்லது 11,376 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது.
சென்செக்ஸ் எவ்வளவு ஏற்றம்?
இதே சென்செக்ஸ் 37,945 புள்ளிகள் அல்லது 148% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த ,மார்ச் 2022ல் 25,638 என்ற லெவனை எட்டியது. இது டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவு 63,583 என்ற லெவலை எட்டியது.
இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆனது முறையே 4.31% மற்றும் 4.26% ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச குறியீடுகள்
சர்வதேச குறியீடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய சந்தையின் குறியீடுகள் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது என்றே கூறலாம். நடப்பு ஆண்டில் டவ் ஜோன்ஸ் 10.21% சரிவிலும், எஸ் & பி 500 20.33% சரிவிலும் காணப்படுகின்றது. இதே நாஸ்டாக் இந்த ஆண்டு இதுவரையில் 33.38% சரிவில் காணப்படுகின்றது. இதே ஐரோப்பிய குறியீடுகள், டாக்,CAC40, FTSE 100 உள்ளிட்ட குறியீடுகள் 13.33% மற்றும் 10.62%, 1.79%மும் முறையே சரிவினைக் கண்டுள்ளன.
நிஃப்டியின் இலக்கு
இதற்கிடையில் நிஃப்டி 2023ல் 21,400 என்ற லெவலை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே வலுவான சப்போர்ட் லெவலாக 16,200 என்ற லெவலை எட்டலாம் எனவும், இது 2030 வாக்கில் 50,000 புள்ளிகளை எட்டலாம் என்றும் எதிர்பர்க்கப்படுகிறது.
மொத்தத்தில் 2023ம் ஆண்டு என்பது மிக வலுவான ஆண்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே 2023 இறுதிக்குள் 21,400 என்ற லெவலை எட்டலாம் என்றும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.
எந்தெந்த துறைகள் எப்படியிருக்கும்?
இதற்கிடையில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆனது வங்கி மற்றும் நிதித்துறை, ஆட்டோமொபைல் துறை, பொதுத்துறை நிறுவனங்கள், மூலதன பொருட்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என பலவும் எதிர்காலத்தில் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications