நிஃப்டி எப்போது வரலாற்று உச்சம் தொடும்.. வரும் வாரத்தில் வாய்ப்பிருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தைகள் கடந்த வாரத்திலேயே நல்ல ஏற்றத்தினை கண்டன. சென்செக்ஸ் மீண்டும் 52 வார உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் நிஃப்டியும் நல்ல ஏற்றத்தினை கண்டது.

எனினும் வரும் வாரத்தில் நிஃப்டி புதிய உச்சம் எட்டுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கடந்த வார ஏற்றம் இந்த வாரமும் தொடருமா? வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியாவின் சிறந்த பிராண்டுகள் எது எது தெரியுமா.. இது துறை வாரியாக ஒரு அப்டேட்! இந்தியாவின் சிறந்த பிராண்டுகள் எது எது தெரியுமா.. இது துறை வாரியாக ஒரு அப்டேட்!

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

கடந்த வார வெள்ளிக்கிழமையன்று முடிவிலேயே நிஃப்டியின் கேண்டில் பேட்டர்ன் ஆனது ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்பட்டது. இது தினசரி கேண்டில், வார கேண்டில் என இரண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஒரு சிலர் செல்லிங் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என்றாலும், சிலர் தொடர்ந்து ஏற்றம் காணும் என்றே கணித்து வருகின்றனர்.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

இது குறித்து ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிறுவனம், கடந்த வெள்ளிக்கிழமையன்று 244 புள்ளிகள் கேப் அப்பில் நிஃப்டி தொடங்கியது. இது தொடர்ந்து ஏற்றம் காணலாம். தினசரி கேண்டிலில் நீண்ட புல் கேண்டில் பார்ம் ஆகியுள்ளது. இது 18,150 என்ற லெவலுக்கு மேலாக முடிவடைந்துள்ளது. ஆக இது சந்தையானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற நேர்மறையான நிலையில் காணப்படுகின்றது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

நிஃப்டி குறியீடானது 18,350 என்ற விளிம்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில் நிஃப்டி தனது முந்தைய டாப் லெவலான 18,150 என்ற லெவலை உடைத்துள்ளது. ஆக வரும் வாரத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டால், 18,600 என்ற லெவலை எட்டலாம்.

நிஃப்டி கடந்த வெள்ளிக்கிழமையன்று 321.50 புள்ளிகள் அல்லது 1.78% ஏற்றம் கண்டு, 18,349.70 ஆக முடிவடைந்தது.

மோதிலால் ஆஸ்வால் கணிப்பு என்ன?

மோதிலால் ஆஸ்வால் கணிப்பு என்ன?

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் நிஃப்டி ஹையர் லோ லெவலில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து 18,300 என்ற லெவலுக்கு மேலாக இருந்தால், அடுத்தடுத்து 18,500 மற்றும் 18,600 என்ற லெவலை எட்டலாம். ஒரு வேலை சரிவினைக் கண்டால் முக்கிய சப்போர் லெவல் 18,188 ஆகும்.

இதெ மற்றொரு தரகு நிறுவனம் நிஃப்டி நேர்மறையாக உள்ளதாகவும், அதற்கு மேல் இருந்தால் இது ஏற்றம் காணலாம். இது மீடியம் டெர்மில் 18,600 என்ற லெவலை உடைக்கலாம்.

புதிய உச்சம் எட்டலாம்

புதிய உச்சம் எட்டலாம்

இந்திய சந்தைகள் வரும் வாரத்திலும் ஒரு புதிய உச்சத்தினை எட்டலாம். எனினும் உடனடியாக ஒரு கரெக்ஷன் இருக்கும். அதன் பின் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஒரு வருட காலமாகவே இந்திய சந்தைகள் மிக கடினமாக ஒன்றாகவே இருந்து வருகின்றது. இது உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை, பணவீக்கம், வட்டி அதிகரிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து பலத்த ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டன.

வலுவான மீட்சி

வலுவான மீட்சி

எனினும் தற்போது இந்தியாவின் வளர்ச்சியான மற்ற நாடுகளை காட்டிலும் மீண்டும் வலுவாக மீட்சி காணத் தொடங்கியுள்ள நிலையில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையில் அன்னிய முதலீட்டு விகிதமும் வரும் வாரத்தில் அதிகரிகக்லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ்?

சென்செக்ஸ்?

சென்செக்ஸ் குறித்த மீடியம் டெர்ம் கணிப்புகள் பெரியளவில் இல்லாவிட்டாலும், நீண்டகால நோக்கில் சென்செக்ஸ் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2025-க்குள் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty may rise again next week? here's whats analysts say

Indian stock markets saw a good rally last week itself. Sensex again hit 52-week high. Meanwhile, Nifty also saw a good rally. But will Nifty hit new highs in the coming week?
Story first published: Sunday, November 13, 2022, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X