வரலாற்று உச்சம் தொட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்.. சரிவில் இன்ஃபோசிஸ்..என்ன காரணம்..!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே முதலீட்டாளர்களை குதூகலப்படுத்தும் விதமாக, தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. சென்செக்ஸ் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

இதற்கிடையில் பல முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பும் பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளது.

10ல் ஒன்பது நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது 2,93,804.34 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில் இவ்வளவு தொகை அதிகரிப்பது, வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

டாப் லெவலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாப் லெவலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்


இப்படி பலத்த ஏற்றம் கண்ட நிறுவனங்களில் வழக்கம்போல முதலிடத்தில் இருப்பது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 1,02,382 கோடி ரூபாய் அதிகரித்து 15,14,017.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமர்வில் மட்டும், இதன் பங்கு விலையானது 4.10% அதிகரித்து 2,388.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த ரிலையன்ஸ்

சாதனை படைத்த ரிலையன்ஸ்

வரலாற்று சாதனை படைத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக, 15 லட்சம் கோடி சந்தை மூலதனத்தினை தொட்ட முதல் இந்திய நிறுவனமாகும்.

சமீபத்திய காலங்களாகவே முகேஷ் அம்பானியின் நிறுவனம், பல்வேறு வகைகளில் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, முதலீட்டினை திரட்டி வருகின்றது. இதனால் அதன் பங்கு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்

வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பிஎஸ்இ 30 குறியீடானது இந்த ஒரு வாரத்தில் 3.57% அதிகரித்து அல்லது 2005.23 புள்ளிகள் அதிகரித்து, வரலாற்றில் முதல் முறையாக 58,000 புள்ளிகளை தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 9% மேலாக அதிகரித்துள்ளது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்


டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 44,832.5 கோடி ரூபாய் அதிகரித்து, 14,20,935.10 கோடி ரூபாயாக அதிகரித்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்ததாக உள்ளது.

இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த வெள்ளிக்கிழமையன்று, 5.30 ரூபாய் அதிகரித்து, 3,842.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பு

பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பு

இதே முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரித்து வந்த நிலையில், அதன் சந்தை மூலதனம், 35,342.16 கோடி ரூபாய் அதிகரித்து, 4,54,207.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏர்டெல்லின் சந்தை மூலதனம் அதிகரித்திருந்தாலும், அதன் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில், 1.21% குறைந்து 658.45 ரூபாயாக சரிவில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20,712.29 கோடி ரூபாய் அதிகரித்து, 6,49,943.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏர்டெல்லினை போலவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின், பங்கு விலையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1.23% குறைந்து 2766.70 ரூபாயாக சரிவடைந்து முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை சந்தை மூலதனமானது 17,373.55 கோடி ரூபாய் அதிகரித்து, 5,02,232.46 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில், சற்று குறைந்து 724.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

இதே நாட்டின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பானது, 17,001.38 கோடி ரூபாய் அதிகரித்து, 3,85,007.74 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எஸ்பிஐயின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில், சற்று அதிகரித்து, 431.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

இதே நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை சேர்ந்த பெரும் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது, 14,954.74 கோடி ரூபாய் அதிகரித்து, 8,72,362.42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையும் வெள்ளிக்கிழமையன்று முடிவில், சற்று குறைந்து, 1,576.05 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சியின் சந்தை மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சியின் சந்தை மதிப்பு

தனியார் துறை சேர்ந்த நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சியின் சந்தை மதிப்பானது, 7,298.81 கோடி ரூபாய் அதிகரித்து, 4,98,290.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சியின் பங்கு விலையும் வெள்ளிக்கிழமையன்று முடிவில், சற்று குறைந்து, 2758.60 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இன்ஃபோசிஸ் மட்டும் சரிவு

இன்ஃபோசிஸ் மட்டும் சரிவு


டாப் 10 நிறுவனங்கள் ஒரு நிறுவனம் மட்டுமே சரிவைக் கண்டுள்ளது அது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பானது 3457.12 கோடி ரூபாய் அதிகரித்து 7,21,244.78 கோடி ரூபாயாக சரிவை சந்தித்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பானது சரிவினைக் கண்டிருந்தாலும், வெள்ளிக்கிழமையன்று முடிவில் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 1,700.65 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

லாபம் தான்

லாபம் தான்

மொத்தத்தில் கடந்த வாரத்தில் நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் அல்ல, பல வர்த்தகர்களும் நல்ல லாபத்தில் தான் உள்ளனர். எனினும் வரும் வாரத்தில் சந்தையானது உச்சத்தில் உள்ள நிலையில் புராபிட் புக்கிங் இருக்கலாம். ஆக சந்தையானது சரியும்போது வாங்கி வைக்கலாம். இது இன்னும் லாபகரமானதாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+