கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தைகளின் எழுச்சிக்கு சில்லரை முதலீட்டாளர்கள் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். உலகளாவிய அபாயங்கள் தோன்றியபோதும் அவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியின் போது தொடர்ந்து பங்குகளை வாங்கி குவித்தனர். ஆனால் இன்று அதே சில்லறை முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால், சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அச்சம் அதிகரிப்பு, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் அதனை தொடர்ந்து அந்நாடு மந்தநிலைக்குள் செல்லும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கடந்த வியாழன் முதல் திங்கள் வரையிலான 3 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 5 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

இந்த 3 தினங்களில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ரூ.24 லட்சம் கோடியை இழந்தனர். பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சில்லரை முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இந்நிலையில், 2008ம் ஆண்டை போல் பங்குச் சந்தையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டால் சில்லரை முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளுக்கு இந்திய பங்குச் சந்தையிலிருந்து விலகி செல்லும் அபாயம் உள்ளதாக நிதின் காமத் எச்சரித்துள்ளார்.
ஜெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிதின் காமத் எக்ஸில், கடந்த 5 ஆண்டுகளில் சில்லரை முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை நிகர வாங்குபவர்களாக இருந்து வருவது ஒரு விசித்திரமான விஷயம். அவர்கள் தொடர்ந்து சரிவில் வாங்குவார்களா என்பது யாராவது யூகிக்க முடியுமா?. ஒரு பெரிய வீழ்ச்சி சில்லறை முதலீட்டாளர்களை பல ஆண்டுகளாக பங்குச் சந்தைகளிலிருந்து விலகி வைக்கும். 2008 பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு பிறகு செய்தது போல.
2008ம் ஆண்டில் லெஹ்மன் பிரதர்ஸ் நெருக்கடிக்கு பிறகு ஏற்பட்ட மந்தநிலை காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. இந்திய பங்குச் சந்தைகளும் மோசமாக பாதிக்கப்பட்டது. 2008 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 60 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டது. அந்த காலத்தில் சென்செக்ஸ் 21,206 புள்ளிகளிலிருந்து 8,160 புள்ளிகளாக சரிந்தது. இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் 2008ம் ஆண்டு மிகவும் மோசமான அமைந்தது.
முதலீட்டாளர்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்தனர். நீண்ட காலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இந்த பக்கம் இனி தலை வைச்சு பக்கம் மாட்டேன் என்று பங்குச் சந்தையிலிருந்து விரக்தியில் விலகினர். பின்னர் ரிசர்வ வங்கியின் நிதி ஊக்குவிப்பு, பணப்புழக்க உந்துதல் மற்றும் சர்வதேச நிலவரங்களில் முன்னேற்றம் போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் மீட்சியை சந்தித்தன. இருப்பினும் பழைய உச்சத்தை தொட பங்குச் சந்தைகளுக்கு 2 ஆண்டுகள் ஆனது. அதேசமயம், முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை மீது நம்பிக்கை திரும்ப அதிக காலம் எடுத்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications