இந்தியாவில் குறிப்பிட்ட சில ஸ்மால் கேப் நிறுவனங்கள் மல்டி பேக்கர் பங்குகளாக மாறி முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை பெற்று தந்துள்ளன. அந்த வகையில் நிதின் ஸ்பின்னர்ஸ் லிமிடெட் எனப்படும் ஸ்மால் கேப் நிறுவனம் நான்கு ஆண்டுகளில் முதலீடாளர்களின் பணத்தை பல மடங்கு உயர்த்தி தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து ஏற்றத்தில் தான் இருக்கும் என தரகு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.
நிதின் ஸ்பின்னர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏப்ரல் மற்றும் ஜூன் வரையிலான காலாண்டில் தங்கள் நிறுவனத்தின் நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இந்த காலாண்டில் 42 .1 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட சுமார் 48% அதிகமாகும். அதேபோல நிறுவனத்தின் வருமானம் 83 கோடி ஆக இருக்கிறது இது கடந்த ஆண்டை விட 30% உயர்வு.

இந்த நிறுவனத்தின் கிராஸ் மார்ஜின் என்பது 37.2% என உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏற்றுமதியின் மூலம் இந்த நிறுவனத்தின் வருமானம் 64% உயர்ந்துள்ளது. நிதின் ஸ்பின்னர்ஸ் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான நிதி நிலைமையை பராமரித்து வருகிறது என தரவு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கலாம் என தெரிவித்துள்ளன.
தற்போது இந்தியாவில் காட்டன் விலை சீராகி வரும் நிலையில் கூடிய விரைவில் காட்டன் பொருட்களுக்கான மற்றும் நூல்களுக்கான தேவை என்பது அதிகரிக்கும், எனவே இந்த நிறுவனத்தின் வருமானமும் கூடும் என கூறும் தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு தற்போது இருப்பதை விட 23% அதிகரித்து 532 ரூபாய் என உயரும் என்கின்றனர்.
இந்த பங்கினை பொருத்தவரை இதன் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 447 ரூபாயாகும் 52 வாரகால குறைந்தபட்ச மதிப்பு 227 ரூபாய் . இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2421 கோடி ரூபாய், பங்கின் பேஸ் வேல்யூ 10, புக் வேல்யூ 203.90. இந்த நிறுவன பங்குகளில் 56% புரமோட்டர்கள் வசம் இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் 24% பங்குகளையும் , மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் 14% பங்குகளையும் கொண்டுள்ளன.
இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 25% உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1100% அதிகரித்துள்ளது .அதாவது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 37 ரூபாய் அதுவே தற்போது 447 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 35% அதிகரித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications