மத்திய அரசின் சூப்பர் அப்டேட்.. NMDC, டாடா ஸ்டீல், JSW ஸ்டீல் நிறுவனங்கள் செம ஹேப்பி.. இனி பங்கு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஸ்டீல் மற்றும் இரும்பு தாதுக்கான ஏற்றுமதி வரியினை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் ஏற்றுமதியானது சரிவினைக் கண்ட நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பானது வந்துள்ளது. குறிப்பாக பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி விகிதமானது 21% சரிவினைக் கண்டுள்ளது.

இதில் முக்கியமாக ஸ்டீல் மற்றும் இரும்பு தாதுக்கள் ஏற்றுமதியானது கணிசமான சரிவினைக் கண்டுள்ளது. இதனால் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேவையை ஊக்குவிக்கலாம்

தேவையை ஊக்குவிக்கலாம்

மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது இரும்பு சார்ந்த பங்குகளை ஊகுவிக்கலாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கட்டுமானத் துறையில் ஸ்டீல் தேவையானது அதிகரிக்கலாம். மொத்தத்தில் தேவை என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டீல் சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாக அமையலாம்.

பலன் எப்போது?

பலன் எப்போது?

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் NMDC பெரும் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த அறிவிப்பினால் மீடியம் டெர்மில் பலன் இருக்குமா? என்பதும் சந்தேகமாகத்தான் உள்ளது என கோடக் இன்ஸ்டிட்யூசனல் ஈக்விட்டீஸ் தெரிவித்துள்ளது. ஆக அதற்கேற்ப உங்களது முதலீடுகளை திட்டமிடுவது அவசியமான ஒன்று.

எதற்கு எவ்வளவு வரி?
 

எதற்கு எவ்வளவு வரி?

58%- கும் குறைவான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்கு வரி கிடையாது. இதே 58%-கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும். இரும்புத் தாதுத் துகள்களின் ஏற்றுமதிக்கு வரி கிடையாது.
இதே ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி, ஃபெரோனிக்கல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும். இதே கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும்.

என் எம் டி சி கணிப்பு

என் எம் டி சி கணிப்பு

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் NMDC நிறுவனத்தின் பங்கு விலையானது, இது 160 ரூபாய் என்ற இலக்கினை எட்டலாம். இந்த நிறுவனத்தின் எபிட்டா விகிதம் FY23 - FY25 ஆண்டில் 9- 38% என்ற அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கலாம். இதன் ஏற்றுமதி விகிதமானது இனி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்பங்கின் விலை 115.30 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

எனினும் இத்தகைய நேரத்திலும் SAIL நிறுவனத்தினை விற்பனை செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இத்துறையில் இருந்து வந்த சவால்களில் வரி விகிதமும் இருந்து வந்தது. எனினும் இது எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கலாம். எப்படியிருப்பினும் தற்போதைக்கு இப்பங்கின் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 இலக்கு எவ்வளவு?

இலக்கு எவ்வளவு?

தரகு நிறுவனம் ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனத்தின் இலக்கு விலையை 550 ரூபாயில் இருந்து, 605 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் 180 ரூபாயில் இருந்து, 210 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஷியாம் மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை 355 ரூபாயில் இருந்து, 425 ரூபாயாக திருத்தம் செய்துள்ளது. இதில் என் எம் டி சி பங்கின் விலையானது 102 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரிக்கலாம்.

செல்லிங் அழுத்தம் இருக்கலாம்

செல்லிங் அழுத்தம் இருக்கலாம்

இதே ஜே எஸ் டபள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் இலக்கு விலையாக 475 ரூபாயாக செல்லிங்கில் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இது 550 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டது.

மத்திய அரசின் அறிவிப்பால் மூலதன ஏற்றுமதி அதிகரிக்கலாம். இது ஸ்டீல் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NMDC, Tata Steel, JSW Steel and many other brokerages recommend buying stocks

Central government announced cancellation of export tax on steel and iron ore. Companies like NMDC, Jindal Steel & Power, Jindal Stainless, Shyam Metalics etc. can be recommended to buy shares
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X