சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) என்பது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். மியூச்சுவல் பண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக தவணை முறையில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி ஆகும். இந்தியாவில் எஸ்பிஐ போன்ற நீண்ட கால முதலீடுகள் குறித்து முதலீட்டாளா்கள் நிச்சயமற்று உள்ளனர்.
எஸ்பிஐ போன்ற நீண்ட கால முதலீடுகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், 20 ஆண்டுகள் சந்தையில் முதலீடு செய்தாலும் நீங்கள் ஆதாயம் அடைவீர்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று அன்சிட் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அனுராக் சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பங்குச் சந்தையில் 20 வருடங்கள் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம் என்று கூறும் நிபுணர்கள் மற்றும் சந்தை நிபுணர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. கடந்த கால செயல்திறன் எதிர்காலத்துக்கான உத்தரவாதம் அல்ல என்று மக்கள் கூறுகிறார்கள். பங்குச் சந்தையை பொறுத்தவரை யாரும் எதற்கும் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.
எஸ்ஐபி பகுப்பாய்வு என்பது ஒரு பின்னோக்கிய நிகழ்வு. பங்குச் சந்தையில் 7,8,10 ஆண்டுகள் கரடியின் ஆட்டம் (வீழ்ச்சி) இருந்துள்ளது. அப்போது பங்குகள் மிகவும் மலிவாக இருந்தன. அந்த நேரத்தில் நீங்கள் பங்குகளில் முதலீடு செய்திருந்தால். இன்று நீங்கள் மிகவும் பணக்காரர்களாக வெளியே வருவீர்கள் என்பது தெளிவாகிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவை தவிர்த்து உலகில் எந்த நாடுகளிலும் சந்தைகள் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டது இல்லை. கடந்த டிசம்பர் வரை 54 லட்சம் புதிய எஸ்ஐபி கணக்குகள் தொடங்கப்பட்டன, அதேசமயம் 44 லட்சம் எஸ்ஐபி கணக்குகள் மூடப்பட்டன.
கடந்த 2,3 ஆண்டுகள் ஏன் கடந்த ஒரு வருடத்தில் கூட முதலீட்டாளர்கள் இந்த நிதியிலிருந்து அந்த நிதிக்கு என பணத்தை மாற்றியுள்ளார்கள். இது முதலீட்டாளர்களுக்கு கூட நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.
முதலீட்டாளர்கள் கடந்த கால வருமானத்தை துரத்துகிறார்கள். அது எவ்வளவு வேகமாக ஏறியதோ அவ்வளவு விரைவாக குறைந்து விடும். இதை சொல்வதில் எனக்கு சந்தேகமும் இல்லை. எது நல்லது எது கெட்டது என்று எனக்கு தெரியாது. மதிப்புமிக்க முடிவு இல்லை. ஆனால் இவை சந்தைகள். எனவே தயவு செய்து நீங்கள் சொந்தமாக முடிவு எடுங்கள்.
செபியின் உத்தரவுப்படி, மியூச்சுவல் பண்டுகள் பணம் வந்தால் அதை உடனடியாக முதலீடு செய்ய வேண்டும். பணத்தை கையில் வைத்திருந்து சந்தை சரிவின்போது முதலீடு செய்ய முடியாது. அது ஒரு சிறிய பிரச்சினை. அதிக மதிப்பீடுகளில் திட்டங்களை தொடங்குவதால் நீண்ட கால வருமானம் மோசமாகி வருவதால் மியூச்சுவல் பண்ட் துறை ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications