இந்தியாவின் முன்னனி நிறுவனமும், இந்தியாவின் நிறுவன முதலீட்டாளருமான எல்ஐசி-க்கு 49,728 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியொன்றில் அதானி குழும பங்குகளின் தொடர் சரிவின் காரணமாக, எல்ஐசி-க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தினை சேர்ந்த 7 நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது.
இது அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளில் கடந்த பிப்ரவரி 23 நிலவரப்படி,எல்ஐசி-யின் முதலீட்டு தொகையின் மதிப்பானது 33,242 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
எவ்வளவு சரிவு?
இந்த விகிதமானது டிசம்பர் 31, 2022 நிலவரப்படி 82,970 கோடி ரூபாயாக இருந்தது. ஆக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பார்க்கும்போது தற்போது 49,728 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
இதே எல்ஐசி-யின் மொத்த ஈக்விட்டி அசெட் மதிப்பு டிசம்பர் 31, 2022 நிலவரப்படி 10.91 லட்சம் கோடி ரூபாயாகும்.
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியாகி வரும் நிலையில், பட்டியலிடப்பட்ட 10 பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. இது அதானி குழுமம் பங்குகளை உயர்த்தி காட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக மோசடியான பணபரிவர்த்தனை, ஷெல் நிறுவனங்கள் மூலம் பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு என பிரச்சனைகளில் ஈடுபட்டதாக அறிவித்தது.
சரிவு எவ்வளவு?
அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி டோட்டல் பங்கானது பெரும் சரிவினை கண்ட ஒரு பங்காக இருந்தது. இது வியாழக்கிழமை வரையில் 78.50% சரிவினைக் கண்டுள்ளது.
அதனை தொடர்ந்து அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 73.50% சரிவினைக் கண்டுள்ளது.
இதெல்லாம் எவ்வளவு வீழ்ச்சி?
இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கின் விலையானது 71.10% சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது 64.10% சரிவிலும், இதே அதானி பவர் நிறுவனத்தின் பங்கின் விலையானது 48.40% சரிவினைக் கண்டும், எண்டிடிவி பங்கின் விலையானது 41.80% சரிவிலும் காணப்படுகின்றது.
40% வரையில் சரிவு
அதானி குழுமம் சமீபத்தில் கையகப்படுத்திய அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி உள்ளிட்ட பங்குகளும் இந்த பட்டியலில் விட்டு போகவில்லை. இவற்றோடு அதானி வில்மர், அதானி பவர், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் 28 - 40% சரிவில் காணப்படுகின்றது.
மொத்த முதலீடு
முன்னதாக ஜனவரி 30 அன்று இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், அதானி குழும நிறுவனங்களில் முதலீட்டின் மதிப்பு 56,142 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 27 அன்று 30,127 கோடி ரூபாயாகும். ஜனவரி நிலவரப்படி அதானி குழுமத்தில் மொத்தம் 36,474.78 கோடி ரூபாய் முதலீட்டினை எல்ஐசி நிறுவனம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எல்ஐசி வாங்கியிருக்கலாம்?
அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் அதானி குழுமத்தில் எல்ஐசி-யின் முதலீடு குறித்து மார்கெட் மோஜோ பிசினஸ் டுடேவுக்கு அளித்த பேட்டியில், எல்ஐசி இதுவரையில் அதானி குழும பங்குகளை விற்றதாக தெரியவில்லை. இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியில் அதானி குழுமத்தில் செய்துள்ள எல்ஐசி முதலீடுகளில் மதிப்பு குறைந்திருக்கலாம்.
உண்மை என்ன?
சந்தை இன்னும் கீழாக சரியும் போது எல்ஐசி இன்னும் அதானி குழும பங்குகளை வாங்கியிருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். எப்படியிருப்பினும் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல அதானி குழுமம் எதிர்காலத்தில் நன்றாக செயல்படலாம். ஆக இவற்றினை வாங்கியிருக்கலாம். எனினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் என்பது வந்தால் மட்டுமே உண்மை என்ன என்பது முழுமையாக தெரியவரும்.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications