1 ஆண்டில் இருமடங்கான முதலீடு.. என்ஆர்பி பேரிங்ஸ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. இனி வாய்ப்பு கிடைக்குமா?

என்ஆர்பி பேரிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பங்கினை வாங்கியுள்ளீர்களா? ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கியிருந்தால் இன்று நல்ல லாபம் பார்த்திருக்கலாம். அதெல்லாம் சரி இனி எப்படி இருக்கும், இந்த இடத்தில் வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பொதுவாக பங்கு சந்தை முதலீடுகளை பொறுத்தவரையில், நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்க கூடிய முக்கிய அம்சமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்க கூடிய பங்கு என்ஆர்பி பேரிங்ஸ் லிமிடெட் நிறுவனம் பற்றி தான்.

இன்றைய பங்கு விலை நிலவரம்

இன்றைய பங்கு விலை நிலவரம்

என்ஆர்பி பேரிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று முடிவில் 5.19% அதிகரித்து, 170.10 ரூபாயாக என்.எஸ்.இ-யில் முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 173.80 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 161.95 ரூபாயாகும். இதே பி.எஸ்.இ-ல் 5.20% அதிகரித்து 169.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இந்த பங்கின் 52 வார உச்ச விலை 173.70 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 74.75 ரூபாயாகும்.

இன்றைய சந்தை நிலவரம்

இன்றைய சந்தை நிலவரம்

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 454.1 புள்ளிகள் அதிகரித்து, 58,795.09 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 121.2 புள்ளிகள் அதிகரித்து 17,536.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
குறிப்பாக பிஎஸ்இ ஹெல்தேகேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ் நிறுவன பங்குகள் 1% மேலாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

ஓராண்டு நிலவரம் என்ன?

ஓராண்டு நிலவரம் என்ன?

கடந்த ஒராண்டில் இந்த பங்கின் விலையானது 129 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 75.7 ரூபாயில் இருந்து 173.7 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஸ்மால் கேப் பங்கின் விலையானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் 69.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

பங்கு விலை அதிகரிக்கலாம்

பங்கு விலை அதிகரிக்கலாம்

இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,600 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவ்ரேஜ்ஜீக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இந்த பங்கின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் காலாண்டில் நிகரலாபம்

செப்டம்பர் காலாண்டில் நிகரலாபம்

இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 143% அதிகரித்து, 22.57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 9.28 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் விகிதமானது 30% அதிகரித்து, 242.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 186 கோடி ரூபாயாக இருந்தது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

எம்.ஏ.சி,டி, பொலிங்கர் பேண்ட், கே.எஸ்..டி மற்றும் ஓபிவி உள்ளிட்ட டெக்னிக்கல் பேட்டர்ன்களில் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்த பங்கின் விலையானது அதன் சராசரி வரலாற்று மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது, தள்ளுபடி விலையில் தான் வர்த்தகமாகின்றது. ஆக இது கவர்ச்சிகரமான மதிப்பீட்டினைக் கொண்டுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+