மூன்று வர்த்தக நாட்களில், நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) பங்குகள் அசுர வளர்ச்சி கண்டு, அதன் ஆரம்ப முதலீட்டாளர்களை பெரும் பணக்காரர்களாக மாற்றியுள்ளது. லட்சக்கணக்கான சதவீதத்தில் எதிர்பாராத லாபத்தை ஈட்டியுள்ளது.
விலை உயர்வு மற்றும் பெரும் லாபம்: கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ரூ.880-க்கு அறிமுகமான NSDL பங்குகள், அதன் ரூ,800 ஐபிஓ விலையை விட 10% பிரீமியத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கின. அடுத்த 72 மணி நேரத்தில், பங்கின் விலை ரூ.1,300.30 ஆக உயர்ந்து, வெளியீட்டு விலையிலிருந்து 62.5% லாபத்தைக் கொடுத்தது. ஆனால், மிக நீண்ட காலத்திற்கு முன்னரே இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருந்த முதலீட்டாளர்கள் அடைந்த லாபம் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

SBI-ன் லாபம்: இந்த லாபத்தில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI முதலிடத்தில் உள்ளது. கடந்த காலத்தில், SBI நிறுவனம் 6 மில்லியன் பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.2 என்ற கணக்கில் வெறும் ரூ.1.20 கோடி முதலீட்டில் வாங்கியது. இப்போது, அந்தப் பங்குகளின் மதிப்பு ரூ.7,801.80 கோடி ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், SBI-க்கு ரூ.7,800.60 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது, 6,50,050% வருமானம் அதாவது 650 பேக்கர் என்று பங்குச் சந்தை அழைக்கப்படுகிறது.
இதேபோல், IDBI வங்கி மற்றும் SUUTI ஆகிய நிறுவனங்களும், ஒரு பங்குக்கு ரூ,2 என்ற விலையில் வாங்கிய தங்கள் முதலீடுகள் மூலம் இதேபோன்ற அபாரமான லாபத்தைப் பெற்று, '650-பேக்கர்' கிளப்பில் இணைந்துள்ளன.
தேசிய பங்குச் சந்தை (NSE) ஒரு பங்குக்கு ரூ.12.28 எனச் சற்றுக் கூடுதலான விலையில் முதலீடு செய்திருந்தாலும், அதன் ரூ,36.84 கோடி முதலீடு இப்போது ரூ,3,900 கோடிக்கும் மேல் மதிப்புடையதாக மாறி, ரூ.3,864 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இதேபோல், HDFC வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களும் கோடிக்கணக்கான லாபங்களை அடைந்துள்ளன.
நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, NSDL ஐபிஓ-வில் பங்குகளைப் பெற்ற 10.31 லட்சம் சில்லறை முதலீட்டாளர்களும் குறிப்பிடத்தக்க லாபத்தில் இருக்கின்றன. இது, நீண்ட கால முதலீட்டின் சக்தியையும், பங்குச் சந்தையில் பொறுமையாக இருப்பவர்களுக்குக் கிடைக்கும் அபாரமான வருமானத்தையும் உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications