அரசு பத்திரங்களில் நேரடியாகச் சில்லறை முதலீட்டினை அதிகரிக்க தேசிய பங்கு சந்தை NSE goBID என்ற செயலி ஒன்றை புதியதாக அறிமுகம் செய்துள்ளது.
NSE goBID செயலி மற்றும் தன் இணையதளச் சேவை மூலம் அரசு பத்திரங்களில் சில்லறை முதலீட்டாளர்களால் எளிமையாக முதலீடு செய்ய முடியும் என்று அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தேசிய பங்கு சந்தைக் குறிப்பிட்டுள்ளது.
தொடக்கம்
தேசிய பங்கு சந்தையின் NSE goBID செயலியினை இன்று செபியின் தலைவரான அஜய் தியாகி தொடக்கி வைத்துள்ளார்.
சென்ற ஏப்ரல் மாதம் தேசிய பங்கு சந்தை நிறுவனம் e-Gsec தளம் மூலம் சில்லைரை முதலீட்டாளர்களை அரசு செக்யூரிட்டிஸ்களில் முதலீடு செய்து அதனை டீமேட் கணக்கில் நிர்வகிக்கும் சேவையினைத் தொடங்கியிருந்தது.
அரசு பத்திரங்கள்
சில்லறை முதலீட்டாளர்கள் பாதுகாப்பாகவும் வேகமாகவும் லாபத்தினை ஈட்ட சிறந்த வழி அரசு செக்யூரிட்டிஸ் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலத்தில் அரசு பத்திர திட்டங்கள் நல்ல லாபத்தினை அளிக்கும்.
NSE goBID
NSE goBID அனைத்து எக்ஸ்சேஞ்களின் உறுப்பினர்களுக்குமான பொதுப்படையான வசதியை அளிக்கும் தலமாக இருக்கும் என்றும் அவர்களது வாடிக்கையாளர்கள் / முதலீட்டாளர்கள் நேரசியாக எந்தப் போட்டியும் இல்லாமல் இதில் முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தச் செயலி மொபைல் போன் மற்றும் இணையதளச் சேவையாக வழங்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள்
தேசிய பங்கு சந்தையின் இந்தப் புதிய தளத்திற்குக் கீழ் முதலீட்டாளர்களால் கருவூல பில்கள், இந்திய அரசின் பத்திரஙகளையும் முதன்மை சந்தையில் இருந்து வாங்க முடியும். வர்த்தகர்களுக்குத் தேவையான அனைத்துப் பரிவர்த்தனை சேவைகளும் இதில் கிடைக்கும்.
ஆர்பிஐ
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சில்லறை வணிகர்களை நேரடியாக அரசு பத்திர திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்பிஐ அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications