ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. சந்தை கணிப்புகளுக்கு இணங்க ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நாணய கொள்கை குழு ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 6.5 சதவீதமாக அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வுக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்திருக்கும் வேளையில் நிஃப்டி 21000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 298.30 புள்ளிகள் உயர்ந்து 69,819.10 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகப்படியாக 69,888.33 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்கெஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் JSW ஸ்டீல் அதிகப்படியாக 3.19 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் என்டிபிசி 2.36 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎப்சி, பவர்கிரிட், இண்டஸ்இந்த வங்கி பங்குகள் அதிகப்படியான வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதேபோல் டிசிஎஸ், ஐடிசி, மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை சரிவைச் சந்தித்துள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு இன்று 21,006.10 புள்ளிகளைத் தொட்டு வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது. 11 மணியளவில் 91.35 புள்ளிகள் உயர்ந்து 20,992.50 புள்ளிகளை எட்டியுள்ளது, துறைவாரியான குறியீட்டில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, பார்மா, ஹெல்த்கேர் துறையின் இன்டெக்ஸ் சரிந்துள்ளது.
ஆர்பிஐ கவர்னர் இக்கூட்டத்தில் நாணய கொள்கை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் மீண்டும் உயர வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.
2024 ஆம் நிதியாண்டின் பணவீக்க டார்கெட் அளவான 5.4 சதவீதத்தில் எவ்விதமான மாற்றமில்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 7 சதவீதமாக உயர்த்த உள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டிய இலக்கை அடையவில்லை எனவும் ஆர்பிஐ கவர்னர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications