பங்குச்சந்தை முதலீடுகள் எப்போதும் முதலீட்டாளர்களுக்கு லாபம் மட்டுமே அளிக்காது, முதலீட்டாளர்களின் முதலீட்டு தேர்வும், முதலீட்டு காலமும் சரியாக இருந்தால் லாபம் தான், ஆனால் கைகொடுக்காவிட்டால் நஷ்டம் தான்..
பங்குச்சந்தை ப்ரோகரேஜ் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய டீமேட் கணக்குகளைத் திறந்து வரும் வேளையில், அவர்களது பழைய வாடிக்கையாளர்கள் சிலர் தொடர்ந்து வெளியேறி வருவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான முதலீட்டாளர்கள் புதிதாக பங்குச்சந்தைக்கு வந்தனர், அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர், பெண்கள் என இதுவரையில் முதலீட்டு சந்தையில் அதிகம் இல்லாத பிரிவில் மக்கள் குவிந்தனர். இதனால் அனைத்து ப்ரோகரேஜ் நிறுவனங்கள் லாபத்தை பார்த்து வந்தது.
ஆனால் பல மாதங்கள் பங்குச்சந்தை முதலீட்டுகள் லாபம் அளிக்காமல் அல்லது பங்குச் சந்தையில் இருந்து வருமானம் வராமல் தேக்கம் அடைவது போன்ற காரணத்தால் முதலீட்டாளர்களின் பணம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து அதிகப்படியான தடுமாற்றத்தை இந்திய பங்குச்சந்தை எதிர்கொண்டு உள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த 9 மாதங்களில் தேசிய பங்குச்சந்தையில் ஆக்டிவாக இருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சுமார் 53 லட்சம் குறைந்துள்ளதாக என்எஸ்இ-யின் சமீபத்திய தரவு காட்டுகிறது. இதேவேளையில் பங்குச்சந்தை லாபம் மட்டும் அல்லாமல் மற்றொரு முக்கிய மாற்றமும் நடந்துள்ளது.

NSE தளத்தில் ஆக்டிவ் ஆக உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக மார்ச் மாதத்தில் 3.27 கோடியாகக் குறைந்து உள்ளது, இது ஜூன் 2022 இல் 3.8 கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த 9 மாத காலக்கட்டத்தில் 53 லட்சம் பேர் தேசிய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்திய பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீட்டாளர்கள் வர முக்கியமான காரணம் வொர்க் ப்ரம் ஹோம், கொரோனா காரணமாக மக்கள் வீட்டில் இருந்த போது தான் அதிகப்படியானோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். லாக்டவுன் முடிந்து வொர்க் ப்ரம் ஹோம் ரத்து செய்யப்பட்டதில் இருந்து முதலீட்டாளர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications