இந்திய பங்குச்சந்தை என்ன தான் ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் சில நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தான் தரும். அந்த வகையில் நுவாமா தரகு நிறுவனம், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய மூன்று பங்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பங்குகள் தற்போதைய நிலையில் இருந்து இரண்டு இலக்க வளர்ச்சியைப் பெறும் என கணித்துள்ளது.
ரிலையன்ஸ்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் மீது நுவாமா பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் பங்குகளின் விலை ரூ.1,357இல் இருந்து ரூ.1,733 ஆக உயர வாய்ப்புள்ளது என கூறுகிறது. இது சுமார் 28% வளர்ச்சிக்கு சமம். எரிசக்தி மாற்றம், சில்லறை வர்த்தகம், டிஜிட்டல் துறைகளில் ரிலையன்ஸின் பெரிய திட்டங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் என நுவாமா கருதுகிறது.

ரிலையன்ஸ் தனது ஆண்டு பொதுக்கூட்டத்தில் 'புதிய எரிசக்தி' (New Energy) துறையின் லாபம் அடுத்த 5-7 ஆண்டுகளில் O2C (Oil to Chemicals) துறைக்கு இணையாக இருக்கும் என்று கூறியுள்ளது. டிஜிட்டல் மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளிலும் வலுவான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நுவாமாவின் அறிக்கையின்படி, ரிலையன்ஸ் 2027-க்குள் EBITDA லாபத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சில்லறை வர்த்தகத் துறை அடுத்த மூன்று ஆண்டுகளில் 20%க்கும் மேலான வருவாய் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) பதிவு செய்யும் என கூறுகிறது.ஜியோ ஐபிஓ மற்றும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் கீழ் வளர்ந்து வரும் FMCG வணிகமும் ரிலையன்ஸுக்கு மேலும் மதிப்பைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியன் பெயிண்ட்ஸ்: ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளில் 18% வளர்ச்சி இருக்கும் என நுவாமா கணித்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கை 'வாங்கலாம்' (Buy) என்ற மதிப்பீட்டை அளித்துள்ளது. ரூ.2,490 ஆக உள்ள பங்கு விலை ரூ.2,935 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாகம் சந்தை பங்கை தக்கவைத்துக்கொள்வதிலும், லாபத்தன்மையை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. நிறுவனத்தின் EBITDA லாப வரம்புகள் அடுத்த சில ஆண்டுகளுக்கு 18-20% என்ற வரம்பிற்குள் இருக்கும் என்று நுவாமா குறிப்பிட்டுள்ளது.
யுனைடெட் ப்ரூவரீஸ் : யுனைடெட் ப்ரூவரீஸ் பங்கு மதிப்பு 34% வளர்ச்சி பெறும் என நுவாமா கணித்துள்ளது. நுவாமா யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவன பங்கினை 'வாங்கலாம்' (Buy) என்ற மதிப்பீட்டை அளித்துள்ளது. ரூ.1,796 ஆக உள்ள பங்கு விலை ரூ.2,400 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 34% வளர்ச்சிக்கு சமம்.
இந்நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் தனது முதன்மை பிராண்டின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பெரிய வளர்ச்சியை நோக்கி நகர்கிறது என கூறியுள்ளது. அதே போல மது பான உற்பத்தியை பல இடங்களில் பரவலாக்கி பெருக்கி வருகிறது என்றும் இது நிறுவன லாபத்தை அதிகரிக்கும் என கணிப்பு வெளியிட்டுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications