வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கான சிப்புகளை தயாரித்து வழங்கக்கூடிய அமெரிக்காவை சேர்ந்த என்விடியா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சந்தை மூலதன அடிப்படையில் பார்க்கும்போது எனவிடியா நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.43 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என அதிகரித்துள்ளது . அதே வேளையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.38 ட்ரில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருக்கிறது.

என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 139.93 டாலர்கள் என ஒரே நாளில் 2.9 சதவீதம் அதிகரித்ததே இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு உயர்வதற்கு காரணமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தான் மதிப்பீடு அடிப்படையில் என்விடியா நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி 3.05 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
இதனை தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது. 2022 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 850 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியிலேயே இருக்கும் என்பதற்கு என்விடியா நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பும் பங்கு மதிப்பும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதே ஒரு உதாரணம் என பங்குச்சந்தை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது அமெரிக்க சந்தையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
செயற்கை நுண்ணுறிவு பயன்படுத்த தொடங்கியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஏஐ போன்களை வெளியீடு செய்திருப்பது, மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கிளவுட் பிரிவில் ஏஐ தொழில்நுட்பங்களை சேர்த்திருப்பது , மெட்டா நிறுவனம் தங்களுடைய செயலிகளில் செயற்கை நுண்ணறிவு வசதிகளை கொண்டு வந்திருப்பது என அனைவருமே தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்த பெரிய நிறுவனங்களுக்கு எல்லாமே செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கான சிப்புகளை தயாரித்து வழங்குகிறது என்விடியா நிறுவனம்.
எனவேதான் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருமானம் 44 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வதால் அதன் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ஜென்சென் ஹூவாங்கின் சொத்து மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அண்மையில் கூட இவர் இந்தியாவுக்கு வருகை தந்து மும்பையில் ஏஐ தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications