வரலாற்று உச்சத்திலிருந்து 50% சரிந்த நைகா, சோமேட்டோ, பேடிஎம், டெல்லிவரி.. வாங்கலாமா?

கடந்த சில காலாண்டுகளாக இந்திய பங்கு சந்தையானது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது.

சென்செக்ஸ் கடந்த அக்டோபர் 2021ல் 59,959.85 என்ற லெவலை எட்டியது. தற்போது அந்த லெவலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 4% சரிவில் காணப்படுகின்றது.

சமீபத்திய ஆண்டுகளாகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கு சந்தையில் நுழைவது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் கடந்த ஆண்டு பங்கு சந்தைக்குள் நுழைந்தன.

பாலிசி பஜார்

பாலிசி பஜார்

ஆரம்பத்தில் புதிய தலைமுறை நிறுவனங்கள் உச்சத்தினை எட்டினாலும், அதன் பின்னர் கொரோனா, அதனை தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது பங்கு சந்தையில் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.

குறிப்பாக பிபி பின்டெக் நிறுவனத்தின் பாலிசி பஜார் பங்கு விலையானது 73% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த நவம்பர் 17,2021ல் 1470 ரூபாயினை தொட்டது. இது நவம்பர் 15, 2021ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. இது 1150 ரூபாயாக பட்டியலிடப்பட்டது. இதன் வெளியீட்டு விலை 980 ரூபாயாகும். இது 17.35% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட் அப்களின் பங்கு விலை சரிவு

ஸ்டார்ட் அப்களின் பங்கு விலை சரிவு

ஓன் 97 கம்யூனிகேஷன் நிறுவனம் (பேடிஎம்), சோமேட்டோ நிறுவனம், பேஷன் நிறுவனமான நய்கா, டெல்லிவரி நிறுவன பங்குகளின் விலையானது முறையே, அதன் உச்சத்தில் இருந்து 67% மற்றும் 63%, 62%, 50% சரிவினைக் கண்டுள்ளது.

நய்கா & பேடிஎம்

நய்கா & பேடிஎம்

நய்கா மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் அதன் செப்டம்பர் காலாண்டு அறிக்கையினை நவம்பர் 1 மற்றும் நவம்பர் 7 அன்று வெளியிடவுள்ளது. முன்னதாக நய்கா நிறுவன, முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 33.4% அதிகரித்து, 4.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.41 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

நோமுரா நிறுவனம் நய்கா நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையானது 1365 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

நய்கா நிறுவனம் அதன் பிராண்டுகள் விரிவாக்கம், அதன் சொந்த பிராண்டுகள் என தொடர்ந்து பல்வேறு வகையிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. பல வெளி நாட்டு பிராண்டுகளுடன் டையப் செய்தும் வருகின்றது. இதனால் இதன் வளர்ச்சி மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாக் இன் காலம் முடிவு

லாக் இன் காலம் முடிவு

இதே பேடிஎம் நிறுவனத்தின் நஷ்டம் 644.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 380.2 கோடி ரூபாயாக இருந்தது.

நவம்பர் 2022ல் நய்கா, பேடிஎம், மற்றும் பிபி பின்டெக் நிறுவன முதலீட்டாளர்களின் லாக் இன் காலம் முடிவடையவுள்ள நிலையில், இதன் பங்கு விலை சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டெல்லி வரி

டெல்லி வரி

கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் டெல்லிவரியை ரெடியூஸ் என்றதில் இருந்து, ஆட் என்று மேம்படுத்தியது. இதன் இலக்கு விலை 415 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது இன்று 344 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

வலுவான வணிக மாதிரிகள்

வலுவான வணிக மாதிரிகள்

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய வலுவான வணிக மாதிரிகளை கொண்டுள்ளன. எனினும் இதன் அதன் மதிப்பீடுகளை உச்சம் தொட்டுள்ளது. இது பெரும் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். அதிக ஆபத்துள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் இந்த பங்கினை பரிசீலிக்கலாம். எனினும் வரவிருக்கும் காலாண்டு முடிவுகளை பரிசீலிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+