பவிஷ் அகர்வால் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட கூடிய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தனது வாகன உற்பத்தி ஆலையில் பெரிய சாதனை படைத்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், கிருஷ்ணகிரியில் உள்ள தனது ஃபியூச்சர் ஃபேக்டரி- யில் 1 மில்லியன் வாகனங்கள் அதாவது 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இங்கே உற்பத்தியைத் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

இதனை அடுத்து பங்குச்சந்தையில், ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 0.71% உயர்ந்து ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.61-ஐ எட்டியது. தொழில்நுட்ப ரீதியாக, ஓலா எலக்ட்ரிக் பங்குகள் ரூ.53 முதல் ரூ.65 வரை வர்த்தகமாகும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ரெலிகேர் புரோக்கிங்கின் ஆராய்ச்சி பிரிவின் மூத்த துணைத் தலைவர் ரவி சிங் , "ஓலா எலக்ட்ரிக் பங்குகள் குறுகிய காலத்தில் ரூ.65 என்ற இலக்கை எட்டக்கூடும். முதலீட்டாளர்கள் ரூ.57-ஐ ஸ்டாப் லாஸாகக் கொள்ளலாம் என்கிறார்.
ஆனந்த் ரதியின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவின் மூத்த மேலாளர் ஜிகர் எஸ் படேல், ரூ.55-ல் சப்போர்ட் நிலையும், ரூ.63-ல் ரெசிஸ்டென்ஸும் உள்ளதாகத் தெரிவித்தார். ரூ.63-ஐ தாண்டினால், ரூ.65-ஐ அடைய வாய்ப்புள்ளதாகவும், குறுகிய கால வர்த்தக வரம்பு ரூ.53 முதல் ரூ.65 வரை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
2017-ல் நிறுவப்பட்ட ஓலா எலக்ட்ரிக், மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரி பேக்குகள், மோட்டார்கள், சேஸ் போன்ற அதன் பாகங்களையும் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள ஓலா ஃபியூச்சர்ஃபேக்டரியில் தயாரிக்கிறது. ஜூன் 2025 நிலவரப்படி, நிறுவனத்தில் பிரமோட்டர்கள் 36.78% பங்குகளை வைத்திருந்தனர்.
இதற்கிடையே 10 லட்சம் வாகனங்கள் என்ற மைல்கல்லை எட்டியதை நினைவுகூரும் வகையில், ஓலா நிறுவனம் தனது 'ரோட்ஸ்டர் எக்ஸ்+' மோட்டார்சைக்கிளின் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிட்நைட் நீல நிறத்தில், இரட்டை நிற இருக்கை, சக்கரங்கள் மற்றும் பேட்டரி பேக்கில் சிவப்பு நிற அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட தாமிரக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பேட்ஜ்கள் போன்ற கூடுதல் அம்சங்களுடன் இந்த சிறப்புப் பதிப்பு வெளிவந்துள்ளது.
மேலும், 4680 பாரத் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் 5.2 kWh மற்றும் 4 kWh பேட்டரி பேக்குகளுடன் கூடிய S1 Pro ஸ்போர்ட் மூலம் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் பிரிவில் ஓலா கால் பதித்துள்ளது. இதன் அறிமுக விலை ரூ.1,49,999 ஆகும். இது 2026 ஜனவரியில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications