இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் உற்பத்தி தளத்தையும், பெங்களூரில் ஆராய்ச்சி தளத்தையும் வைத்துக்கொண்டு குறைந்த காலகட்டத்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் பெரும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் அதிகமாகத் திட்டமிடல் மற்றும் முயற்சியில் ஓலா தனது ஐபிஓ வெளியிட உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரூ.72 முதல் ரூ.76 வரை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகப்படியான ரீடைல் முதலீட்டாளர்களைக் குறிவைத்து ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளார் இதன் நிறுவனர் பாவிஷ் அகர்வால்.

இந்த ஐபிஓ-வின் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு கதவுகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திறக்க இருக்கும் காரணக்தால் இந்த 4 பில்லியன் டாலர் ஐபிஓவில் பல பிரபலமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது தெரிகிறது.
இந்த ஐபிஓ-வில் உள்நாட்டு முதலீட்டாளர்களான SBI AMC, HDFC AMC, Nippon Life India AMC மற்றும் UTI AMC ஆகியவை தலா 200 மில்லியன் டாலரும், வெளிநாட்டு முதலீட்டாளர்களான Fidelity, Nomura மற்றும் Norway's Norges Bank ஆகியவை தலா 75-100 மில்லியன் டாலரும் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐபிஓ-வில் மொத்தம் ரூ.5500 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன, இதோடு ரூ.645.96 கோடி மதிப்புள்ள 84.94 மில்லியன் பங்குகளை OFS பிரிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த ஐபிஓ பங்கு வெளியீட்டின் மதிப்பு ரூ.6145.96 கோடியாகும். ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் சுமார் ரூ.33500 கோடியாகும், அதாவது 4 பில்லியன் டாலர்.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களான பாவிஷ் அகர்வால் மற்றும் இன்டஸ் டிரஸ்ட் ஆகியோர் முறையே 3.79 கோடி மற்றும் 41.79 லட்சம் பங்குகளை இந்த ஐபிஓ-வில் விற்பனை செய்ய உள்ளனர்.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தில் 21.98% பங்குகளை (அல்லது 8.1 கோடி பங்குகள்) வைத்திருக்கும் மிகப்பெரிய பங்குதாரரான SVF II ஒஸ்ட்ரிச் (DE) LLC நிறுவனம் 2.38 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் (EV) மட்டும் அல்லாமல் சில முக்கிய EV உதிரிப்பாகங்களான பேட்டரி பேக்குகள், மோட்டார்கள் மற்றும் வாகனங்களின் ப்ரேம் ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் பணத்தில் சுமார் ரூ.1,227.64 கோடியை தனது துணை நிறுவனமான ஓலா கிகாஃபேக்டரி என கூறப்படும் OCT செல் உற்பத்தி ஆலையின் திறனை 5 GWh-லிருந்து 6.4 GWh ஆக அதிகரிக்கச் செலவிட உள்ளது.
மேலும், இந்த ஐபிஓ நிதியைப் பயன்படுத்தி, தனது துணை நிறுவனமான OET இன் ரூ.800 கோடி கடனை திருப்பிச் செலுத்த உள்ளது. இந்த ஆண்டு ஜூன் 15 நிலவரப்படி, அதன் மொத்த கடன் ரூ.996.67 கோடியாகும். கூடுதலாக, ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கு ரூ.1,600 கோடி செலவிடப்படும் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. IPO நிதியின் மீதமுள்ள நிதியை நிறுவனத்தின் பொது நிர்வாக மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications