ஓலா ஐபிஓ ஷாக் தகவல்.. முதலீடு செய்யும் முன் இதை பாருங்க..!

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி கிருஷ்ணகிரி-யில் பெரும் தொழிற்சாலை கொண்டு இயங்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம், ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தனது ஐபிஓ வெளியிட உள்ளது. இந்த ஐபிஓ மூலம் 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்நிறுவனம் சுமார் ரூ.5500 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரூ.72 முதல் ரூ.76 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக மின்சார வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிட உள்ளது, ஹூண்டாய் இந்தியா ஐபிஓ வெளியிடுவதற்கு முன்பு ஆட்டோமொபைல் துறையில் பெரும் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ வெளியிட உள்ளது. ஆனால் இந்த நிறுவனம் ஐபிஓ-வுக்காக பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள DRHP அறிக்கையில் பல முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டு உள்ளது ஓலா.

ஓலா ஐபிஓ ஷாக் தகவல்.. முதலீடு செய்யும் முன் இதை பாருங்க..!

இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் முதலீடு செய்வது பெரும் ரிஸ்க் ஆகும். ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் 2024 நிதியாண்டில் ரூ.1584 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும், 2023 நிதியாண்டில் ரூ.1472 கோடி நஷ்டத்தைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லாபகரமான நிறுவனம் இல்லை என்பதை முதலீட்டாளர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நஷ்டத்தில் மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் எதிர்மறை பணப்புழக்கத்தில் அதாவது நிதிநெருக்கடியான நிலையில் உள்ளது. இதேபோல் ஓலா நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும், செயல்பாட்டிலும் குறைவான அனுபவமே உள்ளதாகவும் வெட்டவெளிச்சமாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக அதிக செலவு செய்கிறது எனவும் தனது RHP அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் பல முக்கியமான விஷயங்களை முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, ஐபிஓ-வில் முதலீடு செய்வோருக்கு முன்னெச்சரிக்கை கொடுத்துள்ளது. ஓலா ஐபிஓ-வில் பங்கு விலை 72-76 ரூபாய் என்ற குறைவான விலை கொண்டிருக்கும் காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே ஓலா நிறுவனம் கூறிய முக்கியமான விஷயங்களை முழுமையாக தெரிந்துகொண்டு முதலீடு செய்யவும்.

நஷ்டம் மற்றும் எதிர்மறையான பணப்புழக்கம்: ஓலா-வின் RHP அறிக்கையின்படி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2024, 2023 மற்றும் 2022 நிதியாண்டுகளில் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து நஷ்டத்தையும் மற்றும் எதிர்மறை பணப்புழக்கத்தைச் சந்தித்துள்ளது. 2021 நிதியாண்டில் நிறுவப்பட்ட அதன் முக்கிய துணை நிறுவனமான OET, 2024 மற்றும் 2023 நிதியாண்டுகளிலும், 2021 ஜனவரி 6 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலத்திலும் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2017ல் துவங்கியது, ஆனால் 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் முதல் இருசக்கர வாகனத்தை ஓலா தயாரித்தது. 2022 முதல் தினமும் 1000 வாகனங்கள் என உற்பத்தியை விரிவாக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த செயல்பாட்டு வரலாறு: ஓலா நிறுவனம் தனது RHP அறிக்கையில், எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் நிறுவனத்திற்குக் குறைந்த அளவிலான அனுபவம் உள்ளது என்று கூறியுள்ளது. இதன் மூலம் அதன் செயல்பாட்டுச் செலவு குறைவாகவோ அல்லது எதிர்காலத்தில் லாபகரமானதாகவோ இருக்கும் என்று எந்த உறுதியும் இல்லை என்று அது ஒப்புக்கொண்டது.

ஆராய்ச்சி செலவு: "நாங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்துள்ளோம் மற்றும் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த முதலீடுகளில் உறுதியான வருமானம் கிடைக்கும் என்று எந்த உறுதியும் இல்லை" என்று நிறுவனம் தனது RHP இல் கூறியுள்ளது.

சப்ளை மற்றும் விலை ஆபத்து: ஓலா எலக்ட்ரிக் அதன் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருட்களின் சப்ளையில் தடை அல்லது விலை உயர்வு ஏற்படலாம், இது அதன் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை அதிகரிக்கவும், அதன் உற்பத்தி மற்றும் விநியோக நேரத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

அரசின் ஊக்கத்தொகையில் திருத்தம்: அரசின் ஊக்கத்தொகைகள் குறைக்கப்படுவது அல்லது ஓலா எலக்ட்ரிக் வாகனங்களும் ஊக்கத் தொகை பெற தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டால், எங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் ரீடைல் விலை அதிகரிக்கும் மற்றும் எங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் பாதிக்கும். இதனால் நிறுவனத்தின் லாபம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மூலப்பொருள்: ஓலா நிறுவனத்தின் செல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் சப்ளை பாதிக்கப்படவோ, விலை உயர்வு மற்றும் தர பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நிறுவனம் முன்கூட்டியே எச்சரித்துள்ளது. இதில் ஏதேனும் ஒன்று நடந்தால் ஓலா கிகாஃபேக்டரியில் செல் உற்பத்தியையும் அதன் தரத்தையும் பாதிக்கலாம் என அறிவித்துள்ளது.

குறைபாடு அல்லது தர பிரச்சினைகள்: ஓலா சில முக்கிய எலக்ட்ரிக் வாகன உதிரிபாகங்களை தானே வடிவமைத்து உருவாக்குகிறது மற்றும் சில மின்சார வாகன உதிரிப்பாகங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது என்று கூறியது. எனவே உதிரிப்பாகங்களில் குறைபாடு அல்லது தர பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பேட்டரி மாற்றுதல் செலவு: ஓலாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் செயல்பாடு அதன் பேட்டரிகளின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை அதிகம் சார்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரிகளை மாற்றுவதற்கான செலவு அதிகமாக இருப்பதாக கருதினால், அவர்கள் ஓலாவின் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்காமல் இருக்கலாம்.

சார்ஜிங் உள்கட்டமைப்பு: ஓலா நிறுவனம் மற்றும் பிற எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களின் சார்ஜிங் உள்கட்டமைப்புகளின் இணக்கம் இல்லாமல் இருக்கும் காரணத்தால், எதிர்காலத்தில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை நிறுத்திவிடலாம்.

ரிசர்வ் வங்கி நடவடிக்கை: ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (OFSPL) மீது சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது ஒரு புரமோட்டர் குரூப்-ன் நிறுவனமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+