ஓலா எலக்ட்ரிக் பங்குகளில் 50% அதாவது சுமார் 18.18 கோடி நிறுவனத்தின் நிலுவையில் உள்ள 4% பங்குகளுக்கான ஆங்கர் லாக் இன் காலம் இன்றுடன் முடிவடைந்தது. மூன்று மாதங்கள் ஆங்கர் லாக் இன் காலத்துடன் இருந்த ஓலா எலக்ட்ரிக் பங்குகளின் காலம் முடிவடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 5.75% சரிவுடன் ரூ.75.22 ஆக வர்த்தகமாகி வருகிறது.
மூன்று மாதங்கள் ஆங்கர் லாக் இன் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், 50% அதாவது அதன் 18.18 கோடி பங்குகளில் இன்று வர்த்தகம் மேற்கொள்ளலாம். இது லாக் இன் காலாவதியானது இந்த பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்யலாம் என்பதற்கான பொருள் கிடையாது. இந்த பங்குகளை வெறும் வர்த்தகம் செய்ய மட்டுமே செய்யக்கூடியதாக இருக்கும். இதற்கு முன்னதாக, ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 30 நாட்கள் லாக் இன் காலம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முடிவடைந்தன.

இந்த லாக் இன் விதிமுறைகளின்படி, ஐபிஓவில் ஆங்கர் முதலீட்டாளர்கள் வாங்கும் பங்குகள் லாக் இன் காலத்திற்கு உட்பட்டவை, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50% பங்குகள் 30 நாட்களுக்குள் மீதமுள்ள 50% மானியத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் லாக் செய்யப்பட்டிருக்கும்.
ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஐபிஓ சந்தையிலிருந்து சுமார் ரூ.6,145.56 கோடியை அதன் வெளியீட்டிலிருந்து திரட்டியது. இதற்கு முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 36.35 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.76 என ஒதுக்கிய நிலையில், ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2763 கோடியை திரட்டியது.
ஓலா எலக்ட்ரிக் பங்குகள் கடந்த ஆகஸ்ட் 9 தேதி மந்தமான சந்தையில் அறிமுகமாகின. பங்குகள் அதன் வெளியீட்டு விலையில் பட்டியலிடப்பட்டன. அதன்படி பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.76 ஆக தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. அதேபோல், மும்பை பங்குச் சந்தையில், 0.01% தள்ளுபடி விலையில், ரூ.75.99 ஆக பட்டியலிடப்பட்டது. அதேபோல, பங்கு விலை ரூ.157.53 என்ற அதிகபட்ச விலையை கடந்த ஆகஸ்ட் 20 அன்று எட்டியது. அதனைதொடர்ந்து அதன் குறைந்தபட்ச விலையான ரூ.74.82 என்ற குறைந்தபட்ச விலையை கடந்த அக்டோபர் 29 அன்று எட்டியது
இதற்கிடையில் நேற்று நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டிற்கான செப்டம்பர் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பாய்வுகளின் அறிக்கையுடன் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்படாத முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளை பரிசீலனை செய்து அங்கீகரிக்க இயக்குநர்கள் குழு கூட்டம் வரும் நவம்பர் 8 தேதி கூடும் என அறிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி மதியம் 12.45 மணியளவில் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் சுமார் 5.83% சரிவுடன் ரூ.75.01 ஆக வர்த்தகம் செய்து வருகின்றன.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications