ஓலா எலக்ட்ரிக் தடாலடி உயர்வு.. முதலீடு செய்ய செம சான்ஸ்.. ஆனா ஒரு விஷயம்..!!

சென்னை: ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வெறும் மூன்று நாட்களில் அதிகப்படியாக 71 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.51,000 கோடியை தாண்டியுள்ளது. இன்று ஓலா எலக்ட்ரிக் பங்கு விலை அதிகப்படியாக 19 சதவிகிதம் உயர்ந்து ரூ.130 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக்-ன் ஐபிஓ-விற்கு பின்பு பங்குச்சந்தையில் ஒரு பங்கு விலை ரூ.76 என்ற அதன் ஐபிஓ விலைக்கே அறிமுகமானது வருத்தமான விஷயமாக இருந்தாலும், பட்டியலிடப்பட்ட பின்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தை கொடுத்து வருகிறது. இந்திய பங்குச்சந்தையில் பல வருடங்களுக்கு பின்பு ஒரு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது ஓலா எலக்ட்ரிக், அதேபோல் ஓலா எலக்ட்ரிக் தான் நாட்டின் முதல் எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஐபிஓ-வாகவும் திகழ்கிறது.

ஓலா எலக்ட்ரிக் தடாலடி உயர்வு.. முதலீடு செய்ய செம சான்ஸ்.. ஆனா ஒரு விஷயம்..!!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் அறிமுகமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் ரூ.76-க்கு அறிமுகமான இந்த பங்கு, இன்று ரூ.129.40 வரை உயர்ந்தது, ஆனால் இந்த பங்கு விலை தற்போது சரிவுக்கு உள்ளாகியுள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 1.22 சதவீதம் சரிந்து 108.07 ரூபாயாக உள்ளது. இதன் காரணமாக ரூ.51,000 கோடியை சந்தை மதிப்பீடு 47,667.84 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதேவேளையில் ஓலா பங்குகள் 90 ரூபாய் வரையில் குறையும் வரையில் Buy on Dips அடிப்படையில் வாங்கலாம் என்றும், அதிகப்படியாக 150 ரூபாய் வரையில் உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தங்களுடைய கணிப்பை முன் வைத்துள்ளனர்.

இந்த சரிவுக்கு முக்கியமான காரணம் ஐபிஓ முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க முடிவு செய்துள்ளதால் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யும் காரணத்தால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், பங்கு விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு குறித்து சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தபோதிலும், பட்டியலிடும் போது பங்குச்சந்தை நிலவரம் மாறியதால், பங்கு விலை குறைந்தது. இது பங்குச்சந்தை நிலவரத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்யக்கூடாது என்பதை உணர்த்துகிறது" என்று ஸ்டாக்ஸ்பாக்ஸ் பர்த் ஷா கூறினார்.

"ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் முன்னணி வகிக்கிறது. இதுவே பங்கு விலை உயர்வுக்கு முக்கிய காரணம்" என்று அல்பானிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் அரிந்தம் கோஷ் கூறினார். எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக் பங்கீடு மட்டும் 35 சதவீதமாகும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+