இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரம் பிஸியானதாக இருக்கப் போகின்றன. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 8 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி படமெயின்போர்ட் ஐபிஓ ஒன்றும், எஸ்எம்ஈ பிரிவில் 7 ஐபிஓக்களும் பட்டியலிடப்பட உள்ளன. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மூலதனத்தை திரட்டுவதற்காகவும் வணிக விரிவாக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகவும் பங்குச்சந்தையில் தங்களது நிறுவனங்களை பட்டியலிடுவதற்காகவும் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்கை வெளியிடுகின்றன.
இதன் மூலம் கணிசமாக தொகைக்கு குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்கினை லாட் என்ற அளவீட்டில் வாங்க முடியும். சில்லறை முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட நிறுவனங்களில் பங்குகளை வாங்க இது சிறந்த வாய்ப்பு ஆகும்.

Akums Drugs and Pharma: டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த மருந்து நிறுவனம், 1,857 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிடுகிறது. ஜூலை 30ஆம் தேதி ஐபிஓ சப்ஸ்கிரிப்சன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை 646 ரூபாய் முதல் 679 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய சந்தையை பிரதானமாக கொண்டு செயல்படும் நிறுவனம் இது. 2023ஆம் நிதியாண்டில் இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு 29.4% ஆகும்.
SME பிரிவு ஐபிஓ: இந்த பிரிவில் Bulkcorp International, Sathlokhar Synergys, Kizi Apparels, Ashapura Logistics, Rajputana Industries ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுகின்றன. இவற்றுக்கான சப்ஸ்கிரிப்சன் ஜூலை 30-இல் தொடங்கி ஆகஸ்ட் 1-இல் நிறைவடைகிறது.
இந்த ஐபிஓக்களில் Sathlokhar Synergys நிறுவனத்தின் ஐபிஓ தான் அளவில் பெரியது. இந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டின் மதிப்பு 93 கோடி ரூபாய் ஆகும். அடுத்ததாக Ashapura Logistics நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டின் மதிப்பு 52.66 கோடி ரூபாய் ஆகும்.
இவை தவிர Utssav Gold மற்றும் Dhariwalcorp ஆகிய நிறுவனங்களுக்கான ஐபிஓ சப்ஸ்கிரிப்சன் ஜூலை 31இல் தொடங்கி ஆகஸ்ட் 1இல் முடிவடைகிறது.
இந்தியாவில் மெயின்போர்ட் ஐபிஓ வெளியீட்டை பொறுத்தவரை பங்குகள் ஒரு லாட் என்ற அளவீட்டில் தான் விண்ணப்பிக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் தேவைப்படும். இதில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல கட்ட சரிபார்ப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படும். சந்தையில் பட்டியலிடப்படும் நாளில் இதனை விற்று பணமாக்குவது எளிது.
எஸ்எம்ஈ ஐபிஓ என்பது சிறு நிறுவனங்களின் பங்கு வெளியீடு ஆகும். இதில் ஒரு லாட் என்பதன் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும். எனவே இதில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications