உலகளாவிய அளவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் பங்கு சந்தைகளில் பெரும் சூறாவளியே இருந்து வருகின்றது. இதே அதானி குழுமத்தில் முந்தைய சில வாரங்களுக்கு முன்னதாக இந்த சூறாவளி என்பது ஆரம்பித்து விட்டது எனலாம்.
ஜனவரி மாத இறுதியில் அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது , பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்த அறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் மதிப்பானது பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்கள்
அதானி குழுமம் இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனினும் இன்று வரையில் பெரியளவில் கைகொடுத்ததாக தெரியவில்லை.
அதானி குழும பெயரில் ஆரம்பிக்கும் 7 நிறுவனங்கள் பங்கு சந்தையி பட்டியலிட்டுள்ளன. இதில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி விலம்ர் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
எவ்வளவு சரிவு?
இந்த நிறுவனங்களின் மதிப்பானது கடந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி 13.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 4.50 லட்சம் கொடி ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு, 8.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் விலையானது 54% சரிவில் காணப்படுகின்றது. அதனை தொடர்ந்து அதானி கிரீன் எனர்ஜி 49% சரிவிலும், அதானி வில்மர் பங்கு விலையானது 19% சரிவிலும், அதானி போர்ட்ஸ் & சென்ஸ் பங்கு விலையானது 15% சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது 11% மேலாக சரிவிலும் காணப்படுகின்றது.
ஒரே ஒரு கெயினர்
அதானி குழும பங்குகளில் அதானி பவர் நிறுவன பங்கின் விலை மட்டுமே நடப்பு நிதியாண்டில் ஏற்றத்தில் உள்ள ஒரு பங்காக உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி 185.05 ரூபாயாக இருந்த நிலையில் மார்ச் 23, 2023 நிலவரப்படி, 201.20 ரூபாயாக காணப்பட்டது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 9% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
ஆல் டைம் உச்சம்
அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது டிசம்பர் 21, 2022 நிலவரப்படி 4189.55 என்ற இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியது. அதானி கிரீன் எனர்ஜி ஏப்ரல் 19, 2022 நிலவரப்படி அதன் ஆல் டைம் உச்சமான 3048 ரூபாயினை எட்டியது. அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனத்தின் ஆல் டைம் உச்சமானது 987.20 ரூபாயாக செப்டம்பர் 20, 2022 அன்று எட்டியது.
மற்ற பங்குகளின் நிலவரம்?
இதே அதானி பவர் நிறுவனத்தின் ஆல் டைம் உச்சமானது ஆகஸ்ட் 22, 2022ல் 432.80 ரூபாயாகவும் எட்டியது.
அதானி டிரான்மிஷன் மற்றும் அதானி வில்மர் பங்கு விலையானது அதன் ஆல் டைம் உச்சமாக 4238.55 ரூபாயாகவும் மற்றும் 878.35 ரூபாயாகவும், முறையே செப்டம்பர் 16, 2022 மற்றும் ஏப்ரல் 28, 2022 அன்றும் எட்டியது.
இந்த ஆண்டு சரிவு தான்
தேசியப் பங்குச் சந்தையில் 14 நிறுவனங்களுடன், அதானி குழுமத்தின் 5 நிறுவனங்கள் சேர்க்கப்படுவதற்கு முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்த நிலையில், என்எஸ்இ வாரியம் மற்றும் செபி இதில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் சேமிப்பு இதில் அடங்கி இருப்பதால், இதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் வரவிருக்கும் நாட்களில் சந்தையில் ஆவது அதானி குழும பங்குகள் ஏற்றம் காணுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் நடப்பு நிதியாண்டில் அதானி குழும பங்குகள் பலவும் சரிவு பாதையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications