பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை காண முடிகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்களை காண முடிகிறது. நிஃப்டி காலை 24,448 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 24283 புள்ளிகள் வரை சரிவை கண்டது, ஒரு மணி நேரத்திலேயே மீண்டு வந்து நிஃப்டி 24,425 (11.35 மணி நிலவரம்) என வர்த்தகமானது . சென்செக்ஸும் 80,837 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 80,362 புள்ளிகள் வரை சரிந்தது, ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் உயர்ந்து 80,728 புள்ளிகள் (11.35 மணி நிலவரம்) என உயர்ந்தது. இந்த ஏற்ற இறக்கம் என்பது தற்காலிகமானது தான் என ஆதித்யா பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பாலசுப்ரமணியன் கூறியிருக்கிறார். மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் பாலசுப்பிரமணியன், சந்தை கண்ணோட்டத்தில் இதனை ஒரு எதிர்மறையான விஷயமாக பார்க்கக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.

என்ன நடந்தாலும் அதற்கு தயாரான நிலையில் தான் இந்திய பங்குச்சந்தைகள் இருந்தன என கூறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவை நம் பொருளாதாரத்திலோ அல்லது பங்குச் சந்தையிலோ பெரிய அளவில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது கிடையாது என தெரிவித்திருக்கிறார். வரலாற்று ரீதியாக பங்குச்சந்தை தரவுகளை நாம் பார்க்கும் போது இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தை வேகமாக மீண்டு எழுந்து வந்திருக்கிறது என கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய விமான படையினர் பாலாகோட் பகுதியில் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்செக்ஸ் 239 புள்ளிகளும் நிஃப்டி 44 புள்ளிகளும் சரிவை கண்டன. ஆனால் அடுத்த நாளே சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்து தான் வர்த்தகத்தை தொடங்கியது என கூறுகிறார். அதே போல 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை 0.2 சதவீதம் மட்டுமே சரிவை கண்டது என கூறுகிறார்.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரை தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் 33 சதவீதம் உயர்வை கண்டன. போர் நடைபெற்ற அந்த மூன்று மாத காலமும் சென்செக்ஸ் 1115 புள்ளிகளும் நிஃப்டி 319 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. எனவே முதலீட்டாளர்கள் இந்த தாக்குதல் காரணமாக பங்குச்சந்தை இறங்குகிறது என்பதை கண்டு அச்சமடைய கூடாது என கூறுகிறார். இது நிரந்தரமானது கிடையாது இது மிக மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த தாக்கம் இருக்கும் இந்திய சந்தை உடனடியாக பல மடங்கு மீண்டு வரும் என்பதுதான் வரலாற்று ரீதியிலான தரவுகள் காட்டுகின்றன என குறிப்பிடுகிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications