இந்திய ரூபாயின் மதிப்பானது ஆசிய நாணயங்களிலேயே நடப்பு ஆண்டில் மோசமான அளவுக்கு 11.5% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்றம் கண்டு வந்த நிலையில், ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது.
மேலும் அமெரிக்கா டாலர் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வந்த நிலையில், தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறின. இதுவும் ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த ஆண்டில்மட்டும் இந்திய சந்தையில் இருந்து மட்டும், அன்னிய முதலீடுகள் (FII) 2.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வெளியேறியது.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிக மோசமான அளவு உச்சத்தினை எட்டியது. இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரம் என்பது மெதுவான வளர்ச்சியினை எட்டியது. இதற்கிடையிலும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் டாலரின் மதிப்பானது ஏற்றம் காணத் தொடங்கியது. பத்திர சந்தையும் ஏற்றம் காணத் தொடங்கியது. இது ரூபாய் மதிப்பானது சரிவினைக் காண வழிவகுத்துள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு
தொடர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வட்டி விகிதம் தொடர்ந்து தொடர்ந்து அதிகரிக்கும் சூழலே இருந்து வருகின்றது. இதற்கிடையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றது.
முதல் பாதி நிலவரம் இது தான்?
நிபுணர்கள் ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சரிவினைக் காணலாம். இதற்கு சர்வதேச பொருளாதாரம் சரிவில் இருப்பது காரணமாக அமையலாம். இது தொடர்ந்து பொருளாதாரம் சரிவினைக் காண வழிவகுக்கலாம். இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உணவு பணவீக்கம்
சப்ளை சங்கிலி பிரச்சனையால் தொடர்ந்து உணவு பணவீக்கம் என்பது உச்சத்திலேயே இருக்கலாம். இந்த போக்கு கடந்த ஆண்டில் இருந்து 2023லும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் உக்ரைன் - ரஷ்யா பிரச்சனைக்கு முடிவு வந்ததாகவும் தெரியவில்லை எனலாம்.
கொரோனா அச்சம்
தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா அச்சம் என்பது உச்சம் தொடத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் சீனாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகள் முழுக்க பரவாலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கோண்டு சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் மேற்கொண்டு ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
3 நாடுகளில் சரிவு
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என பலவும் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பை குறைத்துள்ளன. இது மேற்கொண்டு கரன்சிகளின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா,சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தாக்கம் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
சர்வதேச நாடுகளின் பொருளாதாரம்
ஐஎம்எஃப் குளோபல் ஜிடிபி விகிதமானது 6.1% என்ற விகிதத்தில் இருந்து, 2022ல் 3.2% ஆக குறைத்து மதிப்பிட்டுள்ளது. இது 2023ல் 2.7% ஆக இன்னும் குறைத்துள்ளது. இதே அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 0.5% மற்றும் 3.2% ஆக சரியலாம் என கணித்துள்ளது. இதே பிரிட்டனின் பொருளாதாரம் ரெசசனை எட்டலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு முக்கிய காரணிகளும் கரன்சிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இலக்கு எப்படி?
இது நடப்பு ஆண்டில் டாலருக்கு 80 - 85 ரூபாய்க்குள் இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது குறிப்பாக நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சரிவில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிற்து. இது தற்போது 82.83 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications