நிர்மலா சீதாராமனின் 8வது பட்ஜெட்.. இந்த 5 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதியன்று எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழ்நிலையில், மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து ரேட்டிங் நிறுவனமான இக்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூலதன செலவினங்களுக்காக ரூ.11 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும். அதேவேளையில், நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்க தனிநபர் வருமான வரியில் பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட நிவாரணத்தை அரசு வழங்கும் என தெரிவித்துள்ளது.

நிர்மலா சீதாராமனின் 8வது பட்ஜெட்.. இந்த 5 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

பொதுவாக அரசாங்கம் மூலதன செலவினத்தை அதிகரித்து, உள்கட்டமைப்பு மேம்பாட்டை தூண்டுவதன் மூலமும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், துறைகளில் தேவையை அதிகரிப்பதன் மூலமும் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும். மூலதன செலவின அதிகரிப்பால் குறிப்பாக, சாலை, ரயில்வே மற்றும் மின்சாரம் போன்ற துறைகள் பயன் அடைகின்றன. அதே நேரத்தில் கிராமப் புற பொருளாதாரத்தில் ஒரு அலை விளைவையும் ஏற்படுத்துகின்றன.

2025 பட்ஜெட்டில் மூலதன செலவினத்தில் ஏற்படும் அதிகரிப்பால் பயன் அடையக்கூடிய 5 பங்குகள் குறித்து ஒரு சிறுபார்வை இதோ.

லார்சன் அண்ட் டூப்ரோ:
கட்டுமானம் உள்பட பல்வேறு துறைகளில் வலுவான தடத்தை பதித்து வரும் லார்சன் அண்ட் டூப்ரோ(எல் அண்ட் டி) பங்கின் விலை தற்சமயம் ரூ.3,418 என்ற அளவில் உள்ளது. இப்பங்கின் விலை 12.6 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இப்பங்கின் சப்போர்ட் லெவல் ரூ.3,380-3,300ஆக கணிக்கப்பட்டுள்ளது. 2022 ஜூலை முதல் இதுவரையிலான காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை இந்த 2 சப்போர்ட் லெவலுக்கு கீழ் நிறைவடைந்தது இல்லை.

சீமென்ஸ்:
கனரக எலக்ட்ரிக் உபகரணங்கள் பிரிவை சேர்ந்த சீமென்ஸ் பங்கின் விலை தற்போது ரூ.5,792 என்ற அளவில் உள்ளது. இப்பங்கின் விலை 18.9 சதவீதம் வரை வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது. இப்பங்கின் சப்போர்ட் லெவல் ரூ.5,410-4,700ஆக கணிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கின் வர்த்தகம் ரூ.6,400க்கு கீழே இருக்கும் வரை, குறுகிய கால சார்பு எதிர்மறையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்டிபிசி:
மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்டிபிசி பங்கின் விலை தற்சமயம் ரூ.322 என்ற அளவில் உள்ளது. இப்பங்கின் விலை 19.6 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இப்பங்கின் சப்போர்ட் லெவல் ரூ.325-305-301ஆக கணிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு மீண்டும் ரூ.385 லெவலுக்கு திரும்பக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன்:
பவர் டிரான்ஸ்மிஷன் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன்பங்கின் விலை தற்போது ரூ.286 என்ற அளவில் உள்ளது. இப்பங்கின் விலை 11.5 சதவீதம் வரை வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது. இப்பங்கின் சப்போர்ட் லெவல் ரூ.275-263ஆக கணிக்கப்பட்டுள்ளது.

ஜெயின் இரிகேஷன்:
மானுபாக்சரிங் நிறுவனமான ஜெயின் இரிகேஷன் பங்கின் விலை தற்சமயம் ரூ.70.30 என்ற அளவில் உள்ளது. இப்பங்கின் விலை 56.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இப்பங்கின் சப்போர்ட் லெவல் ரூ.67.70-62.70ஆக கணிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கின் விலை ரூ.110 வரை உயர வாய்ப்புள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Subramaian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+