23000% லாபம்.. கொட்டிக் கொடுத்த பங்கு.. இனியும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் இன்ப அதிர்ச்சி!

பங்கு சந்தையில் இளைய தலைமுறையினர் மத்தியில் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியுள்ள நிலையில், இதுவும் சந்தைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே 23000% வருமானம் கொடுத்த ஒரு பங்கானது, இன்னும் ஏற்றம் காணலாம் என யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.

எந்த நிறுவனம்?

எந்த நிறுவனம்?

இது ஹைத்ராபாத்தினை அடிப்படையாக கொண்ட கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான தன்லா பிளார்ட்பார்ம்ஸ் ஆகும். இந்த நிறுவனம் அதன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில் தான் தரகு நிறுவனம் இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

இவ்வளவு ஏற்றமா?

இவ்வளவு ஏற்றமா?

நீண்டகால நோக்கில் ஏற்கனவே இப்பங்கின் விலையானது நல்ல லாபம் கொடுத்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 23,000 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. கடந்த மே 2, 2012ல் வெறும் 6.2 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, மே 4, 2022ல் 1436.15 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரம்?

தற்போதைய நிலவரம்?

தற்போதைய நிலவரப்படி இப்பங்கின் விலையானது என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது சற்று குறைந்து, 1435.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1484 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச பங்கின் விலையானது 1431 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2096.75 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 735 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 1436.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1480.15 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச பங்கின் விலையானது 1431.15 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2094.40 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 735 ரூபாயாகும்.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

இப்பங்கின் சந்தை மதிப்பானது 19,000 கோடி ரூபாயாக உள்ளது. இதன் பங்கு விலையானது டெக்னிக்கலாக 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் 5 நாள், 20 நாள், 50 நாள் மற்றும் 100 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

வாங்கி வைக்கலாம்

வாங்கி வைக்கலாம்

தொடர்ந்து ஐடி துறையின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், எபிட்டா விகிதமானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. FY22 - FY24E காலகட்டத்தில் இதன் வருவாய் CAGR விகிதமானது 26% மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் சராசரி எபிடா மார்ஜின் 21.4% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இப்பங்கினை வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 1867 ரூபாயாக மதிப்பிட்டுள்ளது.

லாபம்

லாபம்

கடந்த மார்ச் 2022ம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 37% அதிகரித்து, 140.62 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 102.54 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தில் விற்பனை 32.53% அதிகரித்து, 835.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 648.56 கோடி ரூபாயாகவும் இருந்தது.

வணிக விரிவாக்கம்

வணிக விரிவாக்கம்

தன்லா பிளார்ட்பார்ம்ஸ் ஒரு முன்னணி கம்யூனிகேஷன் நிறுவனமாகும். கிளவுட் அடிப்படையிலான தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் இந்த நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை மிக எளிதாக வழங்கி வருகின்றது. மேலும் தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு சமீபத்தில் சில கையகப்படுத்தல்களையும் செய்துள்ளது. இதுவும் இப்பங்கின் வளர்ச்சிக்கு காரணமாக அமையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+