ஒரே வாரத்தில் தலைகீழாக மாறி போன பங்குகள்.. 10 முதல் 41 சதவீதம் வரை குறைந்த 450 ஸ்மால்கேப் பங்குகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய இறக்குமதி கட்டணங்கள் அதிகரிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் என்ற அச்சம், ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்ற பல காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

பங்குச் சந்தையில் பல ப்ளூசிப் பங்குகள் முதல் ஸ்மால்கேப் பங்குகள் வரை அனைத்து துறைகளை சேர்ந்த பங்குகளின் விலை கடுமையாக குறைந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான ஸ்மால்கேப் பங்குகளின் விலை எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளன.

ஒரே வாரத்தில் தலைகீழாக மாறி போன பங்குகள்.. 10 முதல் 41 சதவீதம் வரை குறைந்த 450 ஸ்மால்கேப் பங்குகள்

பொதுவாக ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு பெரிய ரிஸ்க் என்று பல நிபுணர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். ஆனாலும் பங்குகளின் விலை குறைவாக இருக்கிறது என்ற எண்ணத்தில் ஸ்மால்கேப் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவிக்கின்றனர்.

இது பெரிய தவறு என்பதை தற்போதைய சந்தை நிலவரம் வெளிப்படுத்தியுள்ளது. முன்னணி நிறுவனத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி 14ம் தேதியோடு நிறைவடைந்த வாரத்தில், நாட்கோ பார்மா,எக்செல் இண்டஸ்ட்ரீஸ்,ஆர்க்கிட் பார்மா மற்றும் சென்கோ கோல்ட் உள்பட 450க்கும் மேற்பட்ட ஸ்மால்கேப் பங்குகளின் விலை 10 முதல் 41 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதே காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 9.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த இன்டெக்ஸ் அதன் உச்சத்திலிருந்து 22 சதவீதம் குறைவாக உள்ளது. மருந்துகள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் என்ஜிஎல் பைன் கெம் லிமிடெட். கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் என்ஜிஎல் ஃபைன் கெம் லிமிடெட் பங்கு விலை ரூ.1,877.00ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,101.60ஆக இருந்தது. ஆக கடந்த வாரத்தில் இப்பங்கின் விலை 41 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

மருந்து துறையை சேர்ந்த நிறுவனம் நாட்கோ பார்மா. கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் என்ஜிஎல் நாட்கோ பார்மா பங்கு விலை ரூ.1,318.70ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.883.70ஆக இருந்தது. ஆக கடந்த வாரத்தில் இப்பங்கின் விலை 33 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

எக்செல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் எக்செல் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.1,373.60ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.923.25ஆக இருந்தது. ஆக கடந்த வாரத்தில் இப்பங்கின் விலை 32 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

மருந்து துறையை சேர்ந்த நிறுவனம் ஆர்க்கிட் பார்மா லிமிடெட். கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஆர்க்கிட் பார்மா பங்கு விலை ரூ.1,404.15ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.945.45ஆக இருந்தது. ஆக கடந்த வாரத்தில் இப்பங்கின் விலை 32 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஜூவல்லரி நிறுவனம் சென்கோ கோல்ட். கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் சென்கோ கோல்ட் பங்கு விலை ரூ.498.15ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.357.60ஆக இருந்தது. ஆக கடந்த வாரத்தில் இப்பங்கின் விலை 28 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+