ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் சிர்கா பெயிண்ட்ஸ் இந்தியா (Sirca Paints) பங்கின் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நேர்மறையானதொரு கணிப்பினை கொடுத்துள்ளது. இது அடுத்த 6 - 9 மாதங்களுக்குள் 20% வரையில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
இந்த உள்நாட்டு தரகு நிறுவனத்தின் இந்த கணிப்பின் மத்தியில், இப்பங்கு டெக்னிக்கலாகவும், பண்டமெண்டலாகவும் வலுவாக காணப்படும் நிலையில் வந்துள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கும்
இதன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக பல புதிய பொருட்கள் மற்றும் வளர்ச்சி குறித்தான கணிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில், இப்பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது.
சிர்கா பெயிண்ட்ஸ்
சிர்கா பெயிண்ட்ஸ் இந்தியா ஒரு முன்னணி மரப் பூச்சு நிறுவனமாகும். இதன் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி என பலவும் கவனிக்கபப்ட வேண்டிய விஷயங்களாக உள்ளன. இது மட்டும் அல்ல சிர்கா நிறுவனத்தியில் அழங்கார பெயிண்டுகளும் அடங்கும்.
பல நாடுகளில் விற்பனை
சிர்கா இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலும் இதன் பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் சிர்கா SPA என்ற இத்தாலி நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. ஆக இது மேற்கொண்டு இதன் வளர்ச்சியினை ஊக்குவிக்க பயன்படுகின்றது.
முக்கிய சந்தைகளில் கவனம்
வலுவான வணிக யுக்தியினை கொண்டுள்ள இந்த நிறுவனம் , பல்வேறு முக்கிய சந்தைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது. ஆக இது அதன் நீண்டகால வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அதன் பல்வேறு வகையான பொருட்களை விரிவுபடுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக
நீண்டகால வளர்ச்சி
தொடர்ந்து இந்த நிறுவனம் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடங்கி, அதன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு துணை புரியலாம்.
ஐபிஓ-வில் என்ன விலை?
சிர்கா பெயிண்ட்ஸ் இந்தியா நிறுவனம் 2018ல் என் எஸ் இ-யில் பட்டியலிடப்பட்டது. இதன் அப்போதைய மதிப்பு சுமார் 102 ரூபாயாகும். இதன் பொது பங்கு வெளியீடு மூலம் நிறுவனம் 77.92 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. தற்போது அதன் சந்தை மூலதனம் 1710 கோடி ரூபாயாக உள்ளது.
எவ்வளவு ஏற்றம்
கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலைய்யானது 505% ஏற்றத்தினை கண்டுள்ளது. இதன் பங்கு விலையானது 102 ரூபாயில் இருந்து, 613 ரூபாயாக மார்ச் 6 , 2023 அன்று ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது கடந்த ஒராண்டில் மட்டும் 60% ஏற்றத்தினை கண்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இப்பங்கின் விலைய்யானது இரு இலக்கிலும் வளர்ச்சி கண்டுள்ளது.
எவ்வளவு செல்லலாம்?
இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வலுவான போர்ட்போலியோவின் மத்தியில் இதன் முக்கிய மதிப்பு 671 ரூபாயாகவும், அதனை அடுத்து 737 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக அமையலாம்.


Click it and Unblock the Notifications