இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் நிச்சயம் நீங்கள் பேடிஎம், சோமேட்டோ, நய்கா, டெல்லிவரி மற்றும் பாலிசிபஜார் நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடு பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது.
அந்தளவுக்கு லாபத்தினை கொடுத்துள்ளனவா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக மேற்கண்ட நிறுவனங்களால் முதலீட்டாளர்கள் 18 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பு சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயாகும்) இழப்பினை கண்டுள்ளனர். அதுவும் வெறும் 16 மாதங்களில் இந்தளவுக்கு இழந்துள்ளனர்.
ஒரு வகையில் இந்த நிறுவனங்களின் சரிவுக்கு சர்வதேச காரணிகள் காரணம் என்றாலும், மறுபுறம் இன்னும் சில காரணங்களும் பட்டியலில் உள்ளன.
சரிவில் ஏன்?
உலகம் முழுக்க சரிவின் பிடியில் சிக்கியிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றானது உலகை ஆட்கொள்ள தொடங்கியது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகள் தடைபட்டன. இதனால் நிறுவனங்கள் பலத்த சரிவினைக் கண்டன. அந்த கடினமான காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தன. இது மேற்கொண்டு சரிய காரணமாக அமைந்தன.
சரிவினைக் கண்ட 5 நிறுவனங்கள்
மேற்கண்ட பட்டியலில் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் அல்லது பேடிஎம் என்பது முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அடுத்ததாக உள்ள உணவு டெலிவரி ஸ்டார்ட் அப் ஆன சோமேட்டோ நிறுவனம் இடம் பெற்றுள்ளது. மூன்றாவது பியூட்டி பேஷன் நிறுவனமான நய்கா நிறுவனமும், டெல்லிவரி நிறுவனமும், பாலிசிபஜார் உள்ளிட்ட நிறுவனங்களும் பெரும் சரிவினைக் கண்டுள்ளன.
பெரும் நிதி திரட்டல்
இந்த நிறுவனங்கள் ஐபிஓ மூலம் வரலாறு காணாத அளவுக்கு 18 பில்லியன் டாலர்கள் நிதியினை திரட்டியது. இந்த ஹை டெக் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் கொரோனா காலத்தில் பெரும் முதலீட்டினை செய்தனர். இந்த காலகட்டத்தில் பரந்த சந்தையில் உலக நாடுகளை விட இந்திய சந்தையானது புதிய உச்சத்தினை எட்டியது.
பேடிஎம் & சோமேட்டோ
பேடிஎம் நிறுவனத்தின் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், சாப்ட்பேங்க் குரூப் கார்ப் நிறுவனத்தின் லாக் அப் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இப்பங்கின் விலை 10% வரை சரிவினைக் கண்டது.
உபெர் டெக்னாலஜி நிறுவனம் சோமேட்டோ நிறுவனத்தில் ஆரம்பகால முதலீட்டாளர், ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் உணவு வணிகத்தில் இருந்து வெளியேறியது.
முதலீடு செய்யலாமா?
நிறுவனத்திற்கு லாபத்திற்கான தெளிவான பாதை என்பது இல்லை என்றால், புதிய முதலீட்டாளார்கள் இந்த பங்கினில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பங்குகளின் வரலாறு என்ன?
பேடிஎம் பங்கின் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையில் 60% சரிவினைக் கண்டுள்ளது. இதே சோமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த 1 வருடத்தில் 56.76%மும் சரிவிலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 50.73% சரிவிலும் காணப்படுகின்றது.
பாலிசிபஜாரின் நிலை என்ன?
நய்கா நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 185.60 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது நடப்பு ஆண்டில் 47.01% சரிவினையும் கண்டுள்ளது. டெல்லிவரி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 3 மாதத்தில் மட்டும் 34.7% சரிவினைக் கண்டுள்ளது.இதே பாலிசி பஜார் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த 1 வருடத்தில் 74.34% சரிவினைக் கண்டும், நடப்பு ஆண்டி; 60.90% சரிவினைக் கண்டும் காணப்படுகிறது.
பேடிஎம் & சோமேட்டோ
பேடிஎம் பங்கின் விலையானது 10.25% சரிவினைக் கண்டு, 539.80 ரூபாயாக இன்று முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 1955 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 510.05 ரூபாயாகும்.
சோமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 1.46% குறைந்து, 67.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 169 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 40.60 ரூபாயாகும்.
நய்கா & டெல்லி வரி
நய்கா நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 1 வருடத்தில் 47.55% சரிவினைக் கண்டுள்ளது. இதன் 52 வார உச்சம் 428.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 162.50 ரூபாயாகும்.
டெல்லிவரி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.94% குறைந்து, 367.30 ரூபாயாக முவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 708 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 341.30 ரூபாயாகும்.
பாலிசிபஜார் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.56% குறைந்து, 371.55 ரூபாயாக முவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 1470 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 356.20 ரூபாயாகும்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications