பைசாலோ டிஜிட்டல்.. ஸ்மால்கேப் பங்கை போட்டி போட்டு வாங்கிய எல்ஐசி, எஸ்பிஐ லைஃப் இன்ஸ்யூரன்ஸ்

வங்கி சாரா நிதி நிறுவனம் பைசாலோ டிஜிட்டல் லிமிடெட். இந்நிறுவனம் பிஎஸ்இ ஸ்மால்கேப் இன்டெக்ஸில் இடம்பெற்றுள்ளது. பைசாலோ டிஜிட்டல் லிமிடெட் நிறுவனம் கடன்கள் மற்றும் நிதி தயாரிப்புகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.

உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்று சொல்வதை கேட்டு இருப்போம், அதை போல், ஒரு பிரபலமான முதலீட்டாளர் ஒரு நிறுவன பங்கில் முதலீடு செய்தால், அந்த நிறுவனத்தின் எதிர்காலம் எந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு கணிக்க முடியும்.

பைசாலோ டிஜிட்டல்.. ஸ்மால்கேப் பங்கை போட்டி போட்டு வாங்கிய எல்ஐசி, எஸ்பிஐ லைஃப் இன்ஸ்யூரன்ஸ்

ஏனென்றால் பிரபலமான வெற்றிகரமான பங்குச் சந்தை முதலீட்டாளர் ஒருவர் ஒரு பங்கில் முதலீடு செய்யப்போகிறார் என்றால் அந்த நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவற்றை மிகவும் கவனமாக ஆய்வு செய்த பிறகே அந்த பங்கில் முதலீடு செய்வார்.

அதன்படி, நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரான எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்ஸ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பைசாலோ டிஜிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்துள்ளனர். இதன் மூலம் பைசாலோ டிஜிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் தரத்தை நாம் கொஞ்சம் கணித்து கொள்ளலாம்.

எல்ஐசி நிறுவனம் பைசாலோ டிஜிட்டல் லிமிடெட் நிறுவனத்தில் 84.73 லட்சம் பங்குகள் அல்லது 1.4 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. எஸ்பிஐ லைஃப் இன்ஸ்யூரன்ஸ் 6.2 கோடி பங்குகள் அல்லது 9.9 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. மேலும், பைசாலோ டிஜிட்டல் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.605 கோடியும், நிகர லாபமாக ரூ.177 கோடியும் ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.194 கோடியாகவும், நிகர லாபம் ரூ.62 கோடியாகவும் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.57 சதவீதம் உயர்ந்து ரூ.34.56ஆக இருந்தது.

நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பைசாலோ டிஜிட்டல் லிமிடெட் நிறுவன முதலீட்டாளர்களுக்கு 294 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.அதேசமயம் கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 48 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பைசாலோ டிஜிட்டல் லிமிடெட் நிறுவனம் அண்மையில் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 4.8 கோடி டாலர் வெளிநாட்டு நாணய மாற்றத்தக்க பத்திரங்களை (எஃப்சிசிபி) பட்டியலிடுவதாக தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் இந்நிறுவனம் பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்றத்தக்க பத்திரங்கள் வெளியீட்டு மூலம் முதல் தவணையாக 5 கோடி டாலரை திரட்டியது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+