ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் மூலம் மொத்த மத்திய கிழக்கு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் கடந்த 3 நாட்களாக உலக சந்தைகளை அதிரவைத்த நிலையில், பாகிஸ்தான் பங்கு சந்தை திங்கள்கிழமை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது. மார்ச் 2 காலை வர்த்தகம் தொடங்கியவுடன், பாகிஸ்தானின் முக்கிய குறியீடான KSE-30 குறியீடு 9.6% வரை சரிந்து, தற்காலிகமாக 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இந்த திடீர் வீழ்ச்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியிலும், ஆப்கானிஸ்தானுடன் அதிகரித்துவரும் எல்லை பதற்றங்கள் காரணமாக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

ஒரே நாளில் 5,000 புள்ளிகள் சரிவு
இன்று ஒரு நாளில் மட்டும் பாகிஸ்தான் பங்குச்சந்தையின் முக்கிய குறீயீடு வர்த்தகத்தில் KSE-30 குறியீடு சுமார் 5,000 புள்ளிகள் இழந்து 46,351.64 என்ற மோசமான நிலையை தொட்டது. இது பாகிஸ்தான் பங்கு சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவாகும். 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்ட பின்பு வர்த்தகம் மீண்டும் தொடங்கியபோது கூட குறியீடு 9.25% வரை குறைந்த நிலையில் இருந்தது.
இன்றைய கடுமையான சரிவுக்குப் பிறகும், ஆண்டின் தொடக்கம் முதல் பார்க்கும்போது பாகிஸ்தான் பங்கு சந்தை இன்னும் 32% உயர்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலக சந்தைகளும் அழுத்தத்தில்
பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி உலகளாவிய பங்கு சந்தை சரிவுடன் நடந்ததுள்ளது. ஆசிய பங்குகள் சராசரியாக 1.3% குறைந்தன. அமெரிக்காவின் பியூச்சர்ஸ் சந்தைகள் 0.6% சரிந்தன. இந்திய பங்குச் சந்தைகளும் மதிய வர்த்தகத்தில் சுமார் 1.5% வரை குறைந்தன.
ஆனால், சரிவு அளவில் பார்க்கும்போது பாகிஸ்தான் சந்தையின் வீழ்ச்சி மிகவும் கடுமையானதாக இருந்தது.
முக்கிய காரணங்கள்
இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக மத்திய கிழக்கு போர் சூழ்நிலை குறிப்பிடப்படுகிறது. அதேசமயம், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை பதற்றமும் அதிகரித்து வருகிறது. இதேபோல் பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் ஈரான் ஆதரவு போராட்டங்கள் வெடித்துள்ளன.
முக்கிய துறைமுக நகரமான கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் போலீஸுடன் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சந்தை மனநிலையை மேலும் பாதித்தன.
கராச்சியை தலைமையிடமாகக் கொண்ட Arif Habib ப்ரோக்கரேஜ் நிறுவனத்தின் சர்வதேச ஈக்விட்டி விற்பனைத் துறை தலைவர் பிலால் கான் Reuters-க்கு அளித்த பேட்டியில், "மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஈரான் ஆதரவு போராட்டங்கள் சந்தையை கடுமையாக பாதித்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications