பொதுவாக பொதுப் பங்கு வெளியீடானது சில்லறை முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக பார்க்கப்படும். ஏனெனில் நல்ல நிறுவனங்களின் பங்குகளை கூட குறைந்த விலையில் வாங்க முடியும். ஆக சிறு முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் நிறைய பங்குகளை வாங்க முடியும்.
ஆக அந்த வகையில் பிப்ரவரி 21, 2023 அன்று பாட்ரோன் எக்ஸிம் (Patron Exim Limited) நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடானது செய்யப்படவுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
எப்போது வெளியீடு?
பிப்ரவரி 21 அன்று தொடங்கும் பொதுப் பங்கு வெளியீடானது, பிப்ரவரி 24 அன்று முடிவடையவுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கானது பி எஸ் இ-யில் பட்டியலிடப்படவுள்ளது. இந்த பங்கானது மார்ச் 6 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை எவ்வளவு?
ஒரு பங்கு விலை 27 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முக மதிப்பு 10 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் திட்ட அளவு 16.69 கோடி ரூபாயாக உள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனமான இது, 6,180,000 ஈக்விட்டி பங்குகளை வெளியிடவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளர் 4000 பங்குகளை வாங்கலாம் என அறிவிப்பு கொடுத்துள்ளது.
என்ன செய்கிறது?
இதற்கிடையில் மார்ச் 1, 2023 அன்று யாருக்கு எவ்வளவு பங்கு என ஒதுக்கீடு செய்யப்படலாம் என தெரிகிறது. அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், செடாக் மெடிகார்ப், எவோக் ரெமெடீஸ், எர்ரூம் பார்மா (Earum Pharmaceuticals), ஆக்ஸிலியா பார்மாசூட்டிகல்ஸ் (Auxilia Pharmaceuticals), மார்டிட் டயமண்ட்ஸ் (Madrid Diamonds), அட்லாண்டிஸ் எக்ஸிம், என் ஜி ஓவர்சீஸ் மற்றும் பல நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த நிறுவனங்கள் முதன்மையாக பார்மா, கெமிக்கல் துறை என பலவற்றை கொண்டுள்ளது.
முக்கிய சப்ளை
குறிப்பாக இந்த நிறுவனம் செயலில் உள்ள மருந்து பொருட்களில் (APIs ) தெவையான பல முக்கிய மூலப்பொருட்கள் சப்ளையை செய்து வருகின்றது. இது தொழில் துறை சார்ந்த மூலப்பொருட்கள், கெமிக்கல்கள் போன்றவற்றை சப்ளை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் நரேந்திர குமார், கங்காராம்தாஸ் படேல், ஆகியோர் இந்த நிறுவனந்த்தின் விளம்பரதாரர்காளாக உள்ளனர்.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications