பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான one97 கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு ஜூலை 26 ஆம் தேதி பங்குச் சந்தையில் 10% உயர்வு கண்டு அப்பர் சர்க்யூட் நிலைக்கு சென்றது. பேடிஎம் குழுமத்திற்கு சொந்தமான பேடிஎம் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று 10% வரை உயர்ந்தது.
தேசிய பங்கு சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 509 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையில் லாக் ஆனது. நிதி சேவைகள் துறை செயலாளர் பேடிஎம் நிறுவனம் தங்களுடைய பேடிஎம் பேமெண்ஸ் தொழிலில் முதலீட்டினை செய்வதற்கு உரிமம் பெற ரிசர்வ் வங்கியை அணுகலாம் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் தான் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் உயர்வு கண்டன.

பேடிஎம் நிறுவனத்தின் சீனாவை சேர்ந்த ஆண்ட் குரூப் கணிசமான அளவு பங்குகளை வைத்திருப்பதால் இந்த அனுமதியை வழங்குவதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. இந்த நிலையில் ஆண்ட் குழுமம் பேடிஎம் நிறுவனத்தில் தங்களது பங்குகளை கணிசமாக குறைத்துள்ளது. எனவே தான் மத்திய அரசு பேடிஎம் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பேடிஎம் பேமெண்ட்ஸ் சர்வீஸ் என்ற பெயரில், payment aggregator அதாவது டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு இணைப்பாக செயல்படும் மூன்றாம் தரப்பு சேவை வழங்க அனுமதி கோரியது. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தவும் வணிகங்கள் ஆன்லைனில் பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஒரு இணைப்பு நிறுவனமாக செயல்படுபவை தான் payment aggregator.
டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், யுபிஐ ,வங்கி பரிமாற்றங்கள், வாலட்டுகள் போன்றவற்றில் இருந்து வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் இத்தகைய மூன்றாம் தரப்பு நிறுவனம் வழியாகத்தான் உரியவர்களை சென்று அடைகிறது.
அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே பேடிஎம் நிறுவனம் இதற்கான விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி இடம் அளித்தது. ஆனால் பேடிஎம்மில் சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக இருப்பதால் மத்திய அரசின் அனுமதி கட்டாயம் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதனை அடுத்து தான் ஆண்ட் குழுமம் தன்னுடைய பங்குகளை குறைத்துக் கொண்டது.
பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஆண்ட் குழுமத்திற்கு சொந்தமான குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்கிக் கொண்டார். இந்த நிலையில் அரசு தற்போது பேடிஎம் பேமென்ட் சர்வீஸுக்கு அனுமதி தந்துள்ளது இந்த செய்தி வெளியானதை அடுத்து தான் பேடிஎம் நிறுவன பங்குகள் கணிசமான அளவு உயர்வை கண்டன.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications