இந்தியப் பங்குச்சந்தையிலும், ஸ்டார்ட்அப் சந்தையிலும் பெரும் எதிர்பார்ப்பு உடன் ஐபிஓ வெளியிட்ட பேடிஎம் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஆரம்பம் முதல் ஏமாற்றத்தை மட்டுமே அளித்து வந்தது.
இந்த நிலையில் பேடிஎம் நிறுவன முதலீட்டாளர்களுக்குக் கூடுதலான அதிர்ச்சியை அன்னிய முதலீட்டாளர்கள் கொடுத்துள்ளனர்.
பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவன முதலீட்டாளர்கள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்ட நிலையில், ஐபிஓ வெளியிட்டு ஒரு வருடம் முழுவதும் முடிவதற்குள் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 3 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருந்த மொத்த பங்குகளில் சுமார் 44 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பேடிஎம் பங்குகள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
127 முதலீட்டாளர்கள்
2021 நவம்பர் மாதம் இந்திய மக்கள் மத்தியில் பேடிஎம் நிறுவனத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை நம்பி 127 அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் ஐபிஓ வெளியிடுவதற்கு முன்பு 6.71 கோடி பங்குகளை வாங்கினர், இது மொத்த பங்குகளில் 10.37 சதவீதமாகும்.
44 சதவீத பங்குகளை விற்பனை
இந்த நிலையில் செப்டம்பர் மாத முடிவில் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பேடிஎம் நிறுவனத்தில் சுமார் 44 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் தற்போது வெறும் 3.74 கோடி பங்குகளை மட்டுமே வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்.
மோர்கன் ஸ்டான்லி ஏசியா
இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் எண்ணிக்கை தற்போது 88 ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஐபிஓ வெளியிடும் போது மோர்கன் ஸ்டான்லி ஏசியா சுமார் 1.21 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது, செப்டம்பர் மாத தரவுகளில் மோர்கன் ஸ்டான்லி ஏசியா முதலீட்டாளர்கள் பட்டியலில் இல்லை.
ரீடைல் முதலீட்டாளர்கள்
இதேவேளையில் 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்துள்ள ரீடைல் முதலீட்டாளர்கள் வைத்துள்ள பங்குகள் அளவு 2.79 சதவீதத்தில் இருந்து 6.37 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு 0.81 சதவீதத்தில் இருந்து 1.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Paytm ஐபிஓ
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக அப்போதைய காலகட்டத்தில் கூறப்பட்ட Paytm பங்குகள் 2,150 ரூபாய் விலையில் விற்கப்பட்டன, மேலும் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
70 சதவீதம் வரை சரிவு
அதன் ஐபிஓ வெளியீட்டு விலையுடன் ஒப்பிடுகையில் பேடிஎம் பங்குகள் சுமார் 70 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் பேடிஎம் பங்குகள் 52.01 சதவீதம் சரிந்து வெறும் 643 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4,169 கோடி ரூபாயாக உள்ளது.
அடுத்தது என்ன நடக்கும்..?!
பேடிஎம் நிறுவனத்தை அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தாலும், இன்னும் 56 சதவீத பங்குகள் இப்பிரிவு முதலீட்டாளர்கள் கையில் தான் உள்ளது. இதேவேளையில் ரீடைல் மற்றும் மியூச்சவல் பண்ட் முதலீட்டாளர்கள் பேடிஎம் பங்கு இருப்பை அதிகரித்துள்ளனர். இதனால் இதுவரையில் பேடிஎம் பங்குகளை வாங்காதவர்கள் இப்போது வாங்கினால் நீண்ட கால அடிப்படையில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications