பேடிஎம் பொதுப்பங்கு வெளியீடானது பங்கு சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருந்தது என்பது மறைந்து, பங்கு வெளியிட்ட முதல் நாளே பலத்த நஷ்டத்தினை கொடுத்துள்ள மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது.
பட்டியலிடப்பட்ட முதல் நாளே பலத்த சரிவினைக் கண்ட இந்த பங்கு விலையானது, இரண்டாவது நாளான இன்றும் சரிவினைக் கண்டுள்ளது.
இதனால் பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது தொடர்ந்து சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் நஷ்டம்
இது பேடிஎம் நிறுவனத்திற்கு மட்டும் அல்ல, ஐபிஓ-வில் எப்படியேனும் நல்ல லாபம் பார்த்து விடலாம் என்று பெரிதும் எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கும் பெருத்த நஷ்டமாகும். இது பேப்பர் அளவிலான நஷ்டம் என்றாலும், இது மீண்டும் எப்போது அதிகரித்து மேலே வரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில் பல்வேறு தரகு நிறுவனங்களின் நிபுணர்கள் பலரும் செல்லிங் ஆப்சன் கொடுத்து வருகின்றனர்.
விஜய் சேகர் ஷர்மா-வுக்கு இழப்பு
இந்த கடும் வீழ்ச்சி காரணமாக பேடிஎம்-மின் தலைவர் விஜய் சேகர் சர்மாவுக்கு இரண்டு அமர்வுகளில், 781 மில்லியன் டாலர் இழப்பு (ரூ.5,000 கோடிக்கு மேல் ) ஏற்பட்டுள்ளது. பேடிஎம்மின் பங்கு விலையானது இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதன் சந்தை மூலதனம் 1 டிரில்லியன் டாலருக்கும் மேலாக குறைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் அதிருப்தி
பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே இந்த வீழ்ச்சியானது கண்டுள்ள நிலையில், இது பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. அதிக மதிப்பீடு செய்யப்பட்டதே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தள்ளுபடி விலையில் பட்டியல்
பேடிஎம் ஒரு பங்கிற்கு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக ஐபிஓ-வில் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே, அதுவும் தொடக்கத்திலேயே பி.எஸ்.இ-ல் 1955 ரூபாயாக தொடங்கியது. இது அதன் வெளியீட்டு விலையான 2150 ரூபாயில் இருந்து 9.07% சரிவில் காணப்பட்டது.
முதல் நாள் முடிவு
தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில், முடிவில் பேடிஎம் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 27.40% சரிவினைக் கண்டு, 1560.80 ரூபாயாக முடிவடைந்தது. இதே பிஎஸ்இ-ல் 27.25% சரிவினைக் கண்டு, 1564.15 ரூபாயாக முடிவடைந்தது. இதற்கிடையில் அன்று பிஎஸ்இ-ல் இன்றைய உச்சம் 1961.05 ரூபாயாகவும், இன்று குறைந்தபட்ச விலை 1564 ரூபாயாகவும் இருந்தது.
இன்றைய நிலை
பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-ல் 12.61% அல்லது 196.80 ரூபாய் குறைந்து, 1364 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பி.எஸ்.இ-ல் 12.62% அல்லது 198.95 ரூபாய் அதிகரித்து, 1366.50 வர்த்தகமாகி வருகின்றது.
இதே இன்றைய உச்ச விலை 1,518.15 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1271.25 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்சம் 1271.25 ரூபாயாகவும் உள்ளது.
சந்தை மூலதனம் சரிவு
கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் பேடிஎம் பங்கு விலையானது சுமார் 36.27% சரிவினைக் கண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பானது 50,000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இது பட்டியலிடப்படும் முன்பு 1.39 டிரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையை தரகு நிறுவனம் 44% சரிவினைக் காணும் என்று, 1200 ரூபாயாக கணித்துள்ளது.
தெளிவான அம்சம் இல்லை
இது பேடிஎம் வணிகத்தில் லாபத்தினை அடைய எந்த தெளிவான அம்சமும் இல்லை. இது சந்தை சரிவினைக் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் பேடிஎம்மின் மாதாந்திர பரிவர்த்தனை பயனர்களும் அக்டோபர் 2021ல் ஆண்டுக்கு ஆண்டு 35% அதிகரித்து, 63 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 47 மில்லியன் பயனராக இருந்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications