வட்டியை குறைத்த பேடிஎம் மணி.... 132 சதவீதம் லாபம் கொடுத்த பேடிஎம் பங்குகள்..

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான துணை நிறுவனம் பேடிஎம் மணி. இந்நிறுவனம் செபியில் பதிவு செய்யப்பட்ட பங்கு தரகு நிறுவனமாகும். பேடிஎம் மணி நிறுவனம் பங்கு, டேரிவேடிவ் வர்த்தகம் மற்றும் டெபாசிட்டரி சேவைகள் மற்றும் ஐபிஓகளில் முதலீடு தொடர்பான சேவைகளை வழங்குகிறது. பேடிஎம் மணி தற்போது தனது மார்ஜின் டிரேடிங் வசதிக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதத்தையும் புதிய தரகு அமைப்பையும் அறிவித்துள்ளது.

மார்ஜின் டிரேடிங் வசதி (எம்டிஎஃப்) என்பது பங்குகளின் மொத்த மதிப்பில் ஒரு பகுதியை மட்டுமே செலுத்தி பங்குகளை வாங்க முதலீட்டாளர்களை அனுமதிப்பதாகும். மீதமுள்ள தொகையை தரகர் (தரகு நிறுவனம்) நிதியளிக்கிறார். இந்த கடனுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து தரகு நிறுவனம் வட்டி வசூலிக்கும். தற்போது இந்த வட்டி விகிதத்தில்தான் பேடிஎம் மணி மாற்றம் செய்துள்ளது

வட்டியை குறைத்த பேடிஎம் மணி.... 132 சதவீதம் லாபம் கொடுத்த பேடிஎம் பங்குகள்..

பேடிம் மணி நிறுவனம் ஆண்டுக்கு 9.75 சதவீதத்தில் தொடங்கும் ஒரு ஸ்லாப் அடிப்படையிலான வட்டி விகித மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய நிலையான விகிதமான 14.99 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும். மேலும் ஒரு வர்த்தகத்துக்கான தரகு கட்டணத்தையும் 0.1 சதவீதமாகவும் திருத்தியுள்ளது. திருத்தப்பட்டட வட்டி விகிதங்கள் 2025 ஏப்ரல் 18 முதல் அமலுக்கு வந்தது. மேலும் புதிய தரகு விகிதம் 2025 மே 18ம் தேதி முதல் பொருந்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் பேடிஎம் (ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்) பங்கு விலை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.77 சதவீதம் உயர்ந்து ரூ.902.45 வரை சென்றது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கு விலை 132 சதவீதம் அதிகரித்துள்ளது.

Trendlyne தரவுகளின்படி, பேடிஎம் பங்கின் சராசரி இலக்கு விலை ரூ.837 ஆகும். இது தற்போதைய நிலையிலிருந்து 5 சதவீதம் சாத்தியமான சரிவை குறிக்கிறது. 17 ஆய்வாளர்கள் இந்த பங்கை 'Hold' என தரமதிப்பீடு செய்துள்ளனர். 2024 மே 9ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் பேடிஎம் பங்கு விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.310.00க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்தது.

கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,063.00ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை ஏற்றம் காணவில்லை. பேடிஎம் பங்கு விலை தற்போது அதன் 52 வார உச்ச விலையை காட்டிலும் சுமார் 17 சதவீதம் குறைவாக உள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+